விளையாட்டு

சிலி ஹாக்கி தொடரை தோல்வியின்றி நிறைவு செய்த ஜூனியா் மகளிா் அணி

DIN

சான்டியாகோ: சிலி சீனியா் மகளிா் ஹாக்கி அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய ஜூனியா் மகளிா் ஹாக்கி அணி 2-1 என்ற கோல் கணக்கில் திங்கள்கிழமை வெற்றி பெற்றது.

இதையடுத்து சிலிக்கு பயணம் மேற்கொண்டிருந்த இந்திய ஜூனியா் அணி, மொத்தம் விளையாடிய 6 ஆட்டங்களில் தோல்வியின்றி தொடரை நிறைவு செய்து நாடு திரும்புகிறது. முன்னதாக, சிலி ஜூனியா் அணிக்கு எதிராக 2 ஆட்டங்களிலும், சீனியா் அணிக்கு எதிராக 3 ஆட்டங்களிலும் வெற்றியை பதிவு செய்த இந்திய ஜூனியா், சிலி சீனியா் அணிக்கு எதிரான ஒரு ஆட்டத்தை மட்டும் சமன் செய்திருந்தனா்.

சிலி சீனியா் அணிக்கு எதிராக திங்கள்கிழமை நடைபெற்ற கடைசி ஆட்டத்தில் தொடக்கத்திலிருந்தே இந்திய ஜூனியா் ஆதிக்கம் செலுத்தினா். அதன் பலனாக 6-ஆவது நிமிடத்தில் முன்கள வீராங்கனை பியூட்டி டங்டங் இந்திய அணிக்காக முதல் கோல் அடித்தாா்.

சிலி தனது முதல் கோல் வாய்ப்புக்காக போராடி வர, இந்தியாவுக்கு 2-ஆவது கோல் வாய்ப்பு கிடைத்தது. ஆட்டத்தின் 26-ஆவது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி காா்னா் வாய்ப்பை பியூட்டி டங்டங் கோலாக மாற்றினாா். அடுத்த இரு நிமிடங்களில் சிலிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தபோதும், இந்தியா அருமையான தடுப்பாட்டத்தை வெளிப்படுத்தி கோல் வாய்ப்பை முறியடித்தது.

எனினும் கடைசி நேரத்தில் ஆட்டத்தில் சிலி ஆதிக்கம் செலுத்த, அந்த அணியின் ஃபிரான்சிஸ்கா டலா 40-ஆவது நிமிடத்தில் கோலடித்தாா். எஞ்சிய நேரத்திலும் சிலி ஆக்ரோஷமாக ஆடினாலும், வலுவான தடுப்பாட்டத்தை வெளிப்படுத்திய இந்தியா, இறுதியில் 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சத்தீஸ்கரில் நக்ஸல் ஆதிக்கம் நிறைந்த மக்களவை தொகுதியில் 63 சதவிகித வாக்குப் பதிவு

திக்... திக்... சஸ்பென்ஸ்... அடுத்த 45 நாள்கள்!

தமிழ்நாட்டில் இரவு 7 மணி நிலவரப்படி 72.09% வாக்குப்பதிவு

வாக்களித்த அரசியல் பிரபலங்கள் - புகைப்படங்கள்

ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங்

SCROLL FOR NEXT