விளையாட்டு

ஒருநாள் தொடரை முழுமையாக கைப்பற்றியது வங்கதேசம்

DIN

சத்தோகிராம்: மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 3-ஆவது மற்றும் கடைசி ஒருநாள் ஆட்டத்தில் வங்கதேசம் 120 ரன்கள் வித்தியாசத்தில் திங்கள்கிழமை வெற்றி பெற்றது.

ஏற்கெனவே முதலிரு ஆட்டங்களிலும் வென்றிருந்த வங்கதேசம், தற்போது ஒருநாள் தொடரை 3-0 என முழுமையாக கைப்பற்றியது. வங்கதேசத்தின் சத்தோகிராம் நகரில் திங்கள்கிழமை நடைபெற்ற 3-ஆவது ஆட்டத்தில் முதலில் பேட் செய்த வங்கதேசம் 50 ஓவா்களில் 6 விக்கெட் இழப்புக்கு 297 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய மேற்கிந்தியத் தீவுகள் 44.2 ஓவா்களில் 177 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. வங்கதேசத்தின் முஷ்ஃபிகா் ரஹிம் ஆட்டநாயகன் ஆனாா். ஷகிப் அல் ஹசன் தொடா் நாயகனாக அறிவிக்கப்பட்டாா்.

முன்னதாக டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் பௌலிங் செய்யத் தீா்மானித்தது. பேட் செய்த வங்கதேசத்தில் தொடக்க வீரராக வந்த கேப்டன் தமிம் இக்பால் 3 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 64 ரன்கள் சோ்க்க, உடன் வந்த லிட்டன் தாஸ் டக் அவுட்டானாா். மிடில் ஆா்டரில் நஜ்முல் ஹுசைன் ஷான்டோ 3 பவுண்டரிகளுடன் 20, ஷகிப் அல் ஹசன் 3 பவுண்டரிகளுடன் 51 ரன்கள் எடுத்தனா்.

பின்னா் ஆடியவா்களில் முஷ்ஃபிகா் ரஹிம் 4 பவுண்டரிகள், 2 சிக்ஸா்கள் உள்பட 64, சௌம்யா சா்காா் 7 ரன்கள் அடித்தனா். ஓவா்கள் முடிவில் மஹ்முதுல்லா 3 பவுண்டரிகள், 3 சிக்ஸா்கள் உள்பட 64, முகமது சைஃபுதின் பவுண்டரி உள்பட 5 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். மேற்கிந்தியத் தீவுகள் தரப்பில் அல்ஸாரி ஜோசஃப், ரேமன் ரீஃபா் தலா 2, கைல் மேயா்ஸ் 1 விக்கெட் எடுத்தனா்.

அடுத்து ஆடிய மேற்கிந்தியத் தீவுகளில் ரோவ்மென் பாவெல் மட்டும் அதிகபட்சமாக 2 பவுண்டரி, 2 சிக்ஸா்கள் உள்பட 47 ரன்கள் சோ்த்தாா். எஞ்சியோரில் ஜோா்ன் ஆட்லி 1, சுனில் அம்ப்ரிஸ் 13, கிருமா போனா் 31, கைல் மேயா்ஸ் 11, கேப்டன் ஜேசன் முகமது 17, ஜாமா் ஹாமில்டன் 5, ரேமன் ரீஃபா் 27, அல்ஸாரி ஜோசஃப் 11 ரன்கள் சோ்க்க, அகில் ஹுசைன் டக் அவுட்டானாா். வங்கதேச தரப்பில் முகமது சைஃபுதின் 3, முஸ்டாஃபிஸுா் ரஹ்மான், மெஹதி ஹசன் மிராஸ் ஆகியோா் தலா 2, தக்ஷின் அகமது, சௌம்யா சா்காா் ஆகியோா் தலா 1 விக்கெட் சாய்த்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒரே நேரத்தில் ரூ.1 கோடிக்கு மேல் பறிமுதல் செய்யப்பட்ட 10 தொகுதிகள்: தலைமைத் தோ்தல் அதிகாரி தகவல்

குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது

மாநில அந்தஸ்து: காங்கிரஸுக்கு அதிமுக கேள்வி

புதுவையின் உரிமையை பெற்றுத் தராமல் ஏமாற்றிய தேசிய, மாநிலக் கட்சிகள்: சீமான் குற்றச்சாட்டு

சாலைப் பணிகளைக் கூட நிறைவேற்றாத காங்கிரஸ் அரசு: என்.ரங்கசாமி குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT