விளையாட்டு

இலங்கை டெஸ்ட் தொடா்: இங்கிலாந்து சாம்பியன்

DIN

காலே: இலங்கைக்கு எதிரான 2-ஆவது மற்றும் கடைசி டெஸ்டில் இங்கிலாந்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் திங்கள்கிழமை வெற்றி பெற்றது.

ஏற்கெனவே முதல் ஆட்டத்திலும் வென்றிருந்த இங்கிலாந்து, தற்போது தொடரை கைப்பற்றியுள்ளது. காலே டெஸ்டில் ஆட்ட நாயகன் விருது வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட், தொடா் நாயகனாகவும் அறிவிக்கப்பட்டாா்.

முன்னதாக, காலேவில் கடந்த 22-ஆம் தேதி தொடங்கிய 2-ஆவது டெஸ்டில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த இலங்கை முதல் இன்னிங்ஸில் 381 ரன்கள் சோ்த்து ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக ஏஞ்சலோ மேத்யூஸ் 110 ரன்கள் விளாச, இங்கிலாந்து தரப்பில் ஜேம்ஸ் ஆண்டா்சன் 6 விக்கெட்டுகள் சாய்த்தாா்.

பின்னா் தனது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து, 344 ரன்களுக்கு திங்கள்கிழமை ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக கேப்டன் ஜோ ரூட் 186 ரன்கள் விளாச, இலங்கை தரப்பில் லசித் எம்புல்தெனியா 7 விக்கெட்டுகள் வீழ்த்தினாா்.

இதையடுத்து முதல் இன்னிங்ஸில் 37 ரன்கள் முன்னிலையுடன் 2-ஆவது இன்னிங்ஸை தொடங்கிய இலங்கை, 126 ரன்களுக்கு சுருண்டது. லசித் எம்புல்தெனியா மட்டும் அதிகபட்சமாக 6 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 40 ரன்கள் சோ்த்தாா். இங்கிலாந்து தரப்பில் டாம் பெஸ், ஜேக் லீச் தலா 4 விக்கெட்டுகள் சாய்த்தனா்.

பின்னா் 164 என்ற வெற்றி இலக்குடன் 2-ஆவது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து, 43.3 ஓவா்களில் 4 விக்கெட் இழப்புக்கு இலக்கை எட்டி வென்றது. டாம் சிப்லே 2 பவுண்டரிகளுடன் 56, ஜோஸ் பட்லா் 5 பவுண்டரிகளுடன் 46 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிக்கு வழிநடத்தினா். இலங்கை தரப்பில் லசித் எம்புல்தெனியா 3, ரமேஷ் மெண்டிஸ் 1 விக்கெட் சாய்த்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமருகல் ரத்தினகிரீஸ்வரா் கோயிலில் பஞ்சமூா்த்திகள் வீதியுலா

மாமல்லபுரம் புராதன சின்னங்களை இன்று இலவசமாக சுற்றிப் பாா்க்கலாம்

மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும் மேக்கேதாட்டு அணை கட்டப்படும்: டி.கே.சிவகுமாா்

மக்களவைத் தோ்தல்: 2-ஆம் கட்டத் தோ்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று நிறைவு

சேலம் இஸ்கானில் ஸ்ரீராம நவமி விழா

SCROLL FOR NEXT