விளையாட்டு

ஜடேஜாவே இந்தியாவின் தற்போதைய ஆல்-ரவுண்டர்: பந்து வீச்சு பயிற்சியாளர்

23rd Jan 2021 05:24 PM

ADVERTISEMENT

ரவீந்திர ஜடேஜா தான் இந்தியாவின் தற்போதைய ஆல்-ரவுண்டர் என்று இந்தியாவின் பந்து வீச்சு பயிற்சியாளர் பரத் அருண் புகழாரம் சூட்டியுள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜடேஜா ஆல்-ரவுண்டராக வளர்ந்துள்ளது இந்திய கிரிக்கெட் அணிக்கு கிடைத்த கூடுதல் பரிசு என்று கூறினார்.

காயம் காரணமாக சில போட்டிகளிலிருந்து விலகியிருந்தாலும், ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி பலரது கவனத்தை அவர் பெற்றுள்ளார். 

தனது வலுவான ஆட்டத்தால் பந்து வீச்சு மற்றும் ரன்குவிப்பு ஆகிய இரண்டிலும் சிறப்பான பங்களிப்பை ஜடேஜா அளித்து வருகிறார். 

ADVERTISEMENT

ஜடேஜா மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் உலகின் மிகச் சிறந்த சுழற்பந்து வீச்சு இரட்டையர்கள் என்று அவர் கூறினார்.

Tags : Cricket Ind vs Aus Ravindra Jadeja Bharat Arun
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT