விளையாட்டு

'வாத்தி கம்மிங்...' பாடலுக்கு நடனமாடிய கிரிக்கெட் வீரர்கள்

20th Feb 2021 01:07 PM

ADVERTISEMENT


மாஸ்டர் திரைப்படத்தின் வாத்தி கம்மிங்... பாடலுக்கு இந்திய கிரிக்கெட் வீரர்களான அஸ்வின், பாண்ட்யா, யாதவ் ஆகியோர் நடனமாடிய விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இங்கிலாந்து அணிக்கு எதிராக அகமதாபாத்தில் நடைபெறவுள்ள பிங்க் பால் டெஸ்ட் போட்டிக்கு இந்திய கிரிக்கெட் வீரர்கள் தயாராகி வருகின்றனர்.

இதற்காக வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டு வரும் நிலையில், உடற்பயிற்சிக் கூடத்தில் பயிற்சிக்கு பிறகு கிரிக்கெட் வீரர்கள் அஸ்வின், ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா, இடதுகை சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் ஆகியோர் விஜய் பாடலுக்கு நடனமாடினர்.

'மாஸ்டர்' திரைப்படத்தின் வாத்தி கம்மிங்.. எனும் பாடலுக்கு விஜய் நடனமாடுவதைப் போன்று கைகளை அசைத்து நடனமாடினர். இந்த விடியோவை அஸ்வின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

ADVERTISEMENT

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Ashwin (@rashwin99)

Tags : Cricket
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT