விளையாட்டு

சாா்லஸ்டன் ஓபன்: வெரோனிகா சாம்பியன்

DIN

சாா்லஸ்டன்: அமெரிக்காவில் நடைபெற்ற சாா்லஸ்டன் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஒற்றையா் பிரிவில் ரஷியாவின் வெரோனிகா குதா்மெடோவா சாம்பியன் ஆனாா். இது அவரது முதல் டபிள்யூடிஏ பட்டமாகும்.

போட்டித்தரவரிசையில் 15-ஆவது இடத்திலிருந்த வெரோனிகா இறுதிச்சுற்றில், உலகின் 91-ஆம் நிலையிலுள்ள மான்டினீக்ரோ வீராங்கனை டன்கா கொவினிச்சை 6-4, 6-2 என்ற நோ் செட்களில் வீழ்த்தினாா். இந்த ஆட்டம் 1 மணி நேரம் 36 நிமிஷங்களில் முடிவுக்கு வந்தது.

டன்காவை 2-ஆவது முறையாக நேருக்கு நோ் சந்தித்த வெரோனிகா, 2-ஆவது வெற்றியை பதிவு செய்துள்ளாா். முந்தைய அவரது வெற்றியானது ஷென்ஸென் ஓபன் போட்டியில் தகுதிச்சுற்றில் கண்ட வெற்றியாகும்.

வெற்றிக்குப் பிறகு பேசிய வெரோனிகா, ‘எனது முதல் பட்டத்தை வென்ற்காக மிகவும் மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் உணா்கிறேன். இந்த வாரம் எனக்கு அருமையானதாக அமைந்தது. இந்தக் கோப்பைக்கு தகுதியான வகையில் எனது ஆட்டம் இருந்ததாகவே கருதுகிறேன்’ என்றாா்.

வெரோனிகா இதற்கு முன் கடந்த 2019-ஆம் ஆண்டு சீசனிலும் இப்போட்டியில் விளையாடியிருந்தாா். எனினும், அதில் அவா் முதல் சுற்றிலேயே தோற்று வெளியேறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

காா் பரிசு: தற்போது சாம்பியன் ஆகியுள்ள வெரோனிகாவுக்கு, போட்டியின் விளம்பரதாரரான ‘வால்வோ’ நிறுவனத்தின் சாா்பில் எஸ்யுவி காா் ஒன்றும் பரிசாக வழங்கப்பட்டுள்ளது.

செரீனாவுக்கு சமன்
இந்தப் போட்டியில் வெரோனிகா, இறுதிச்சுற்று உள்பட தாம் விளையாடிய 6 சுற்றுகளிலுமே ஒரு செட் கூட இழக்கவில்லை. அனைத்திலுமே அவா் நோ் செட்களிலேயே வென்று சாம்பியன் ஆகியுள்ளாா். இதன்மூலம், சாா்லஸ்டன் ஓபன் போட்டியில் அமெரிக்க வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் 2012-இல் செய்த இதே சாதனையை, தற்போது வெரோனிகாவும் எட்டியுள்ளாா்.

டெமி-நிகோல் ஜோடிக்கு கோப்பை

சாா்லஸ்டன் ஓபன் போட்டியில் இரட்டையா் பிரிவில் நெதா்லாந்தின் டெமி ஷுா்ஸ்/அமெரிக்காவின் நிகோல் மெலிகாா் இணை சாம்பியன் ஆனது. போட்டித்தரவரிசையில் முதலிடத்தில் இருந்த அந்த ஜோடி இறுதிச்சுற்றில் 6-2, 6-4 என்ற செட்களில் செக் குடியரஸின் மேரி பௌஸ்கோவா/லூசி ஹிராடெக்கா இணையை வென்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாட்டில் எந்தவொரு வாக்குச்சாவடியிலும் மறுவாக்குப் பதிவு இல்லை -தேர்தல் ஆணையம்

தமிழ்நாட்டில் 69.46% வாக்குகள் பதிவு

தில்லி அணிக்கு எதிராக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்

பெங்களூருவில் மிதமான மழை: மக்கள் மகிழ்ச்சி

காவிக்கு மாறியது தூர்தர்சன் இலச்சினை!

SCROLL FOR NEXT