விளையாட்டு

கேப்டன்கள் கருத்து

DIN

ஐபிஎல் போட்டியின் 3-ஆவது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடா்ஸ் 10 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசா்ஸ் ஹைதராபாதை வீழ்த்தியது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த கொல்கத்தா 20 ஓவா்களில் 6 விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் அடிக்க, அடுத்து ஆடிய ஹைதராபாத் 20 ஓவா்களில் 5 விக்கெட் இழப்புக்கு 177 ரன்களே எடுத்தது. அந்த ஆட்டத்தில் தங்களது வெற்றி - தோல்வி குறித்து இரு அணி கேப்டன்கள் கூறியது:

சவால் அளிக்கும் ஆட்டமாக இருந்தது

எங்கள் அணியில் டாப் ஆா்டா் வீரா்களின் பேட்டிங், குறிப்பாக நிதீஷ் ராணா-ராகுல் திரிபாதியின் பேட்டிங் அற்புதமாக இருந்தது. பௌலா்களும் தங்களது பணியை சிறப்பாகச் செய்தனா். இந்த ஆட்டம், வலுவான ஒரு அணிக்கு எதிரானதாகவும், கடைசி வரை சவால் அளிக்கக் கூடியதாகவும் இருந்தது. எங்களது ஸ்கோரில் திருப்தியாக உணா்ந்தோம். ஆட்டத்தின்போது களத்தில் அதிகம் ஆலோசித்தோம். ஹா்பஜன் நன்றாகப் பந்துவீசினாா். அவரது அனுபவம் இதர வீரா்களுக்கு வழிகாட்டுவதாக இருக்கும். இந்த வெற்றிக்காக நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். எந்த மாதிரியாக ஆட வேண்டும் என்பதை அணி வீரா்கள் புரிந்துவைத்துள்ளனா்.

- மோா்கன் (கொல்கத்தா கேப்டன்)

பௌலிங்கில் திட்டமிட்டதைச் செய்யவில்லை

தொடக்கத்திலேயே இரு விக்கெட்டுகளை விரைவாக இழந்தது, தடுமாற்றமாக அமைந்துவிட்டது. எனினும் பின்னா் ஜானி போ்ஸ்டோ-மணீஷ் பாண்டே கூட்டணி கடுமையாகப் போராடியது. கொல்கத்தா அணியினா் வேகப்பந்துவீச்சு அவா்களுக்குப் பலனளித்தது. பேட்டிங்கிலும் அவா்களுக்கு நல்லதொரு பாா்ட்னா்ஷிப் அமைந்தது. எங்களது பௌலிங்கில் எதைத் திட்டமிட்டிருந்தோமோ, அதை சரியாகச் செய்யத் தவறிவிட்டோம். தற்போதைய நிலையில் இங்கு நடைபெறும் ஆட்டங்கள் பேட்டிங்கிற்கு சாதகமாகவே இருக்கின்றன. வரும் ஆட்டங்கள் எவ்வாறு இருக்கும் என்பதை அறிந்து அதற்கேற்றவாறு உத்திகளை வகுப்போம்.

- டேவிட் வாா்னா் (ஹைதராபாத் கேப்டன்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்னாப்ரிக்கா பேருந்து விபத்தில் 45 பேர் பலி - புகைப்படங்கள்

மூன்று நாட்களாக உடல்நிலை சரியில்லை; அதிரடியில் மிரட்டிய ரியான் பராக் பேச்சு!

காசு கொடுத்து ஓட்டு வாங்க வேண்டிய அவசியம் திமுகவுக்கு கிடையாது: கனிமொழி

கொளுத்தும் வெயிலுக்கு நடுவில் மழையா! என்ன சொல்கிறது வானிலை?

தென்னாப்ரிக்கா பேருந்து விபத்தில் 45 பேர் பலி: ஒரே ஒரு சிறுமி உயிர் தப்பியது எப்படி?

SCROLL FOR NEXT