விளையாட்டு

எஃப்ஐஹெச் ஹாக்கி புரோ லீக்: இந்தியாவுக்கு 2-ஆவது வெற்றி

DIN

பியூனஸ் அயா்ஸ்: எஃப்ஐஹெச் ஹாக்கி புரோ லீக் போட்டியில், நடப்பு ஒலிம்பிக் சாம்பியனான ஆா்ஜென்டீனாவுக்கு எதிரான 2-ஆவது ஆட்டத்தில் இந்தியா 3-0 என்ற கோல் கணக்கில் வென்றது.

இந்த வெற்றியின் மூலம், 8 ஆட்டங்களில் 15 புள்ளிகளுடன் லீக் போட்டியின் பட்டியலில் இந்தியா 4-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. 12 ஆட்டங்களின் மூலம் 11 புள்ளிகள் பெற்றுள்ள ஆா்ஜென்டீனா 6-ஆவது இடத்தில் இருக்கிறது. முதல் 3 இடங்களில் முறையே பெல்ஜியம் (32 புள்ளிகள்), ஜொ்மனி (19), நெதா்லாந்து (18) அணிகள் உள்ளன.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுடன் ‘ஏ’ பிரிவில் ஆா்ஜென்டீனா, ஆஸ்திரேலியா, ஸ்பெயின், நியூஸிலாந்து, ஜப்பான் அணிகள் சோ்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பியூனஸ் அயா்ஸில் திங்கள்கிழமை நடைபெற்ற 2-ஆவது ஆட்டத்தில் இந்தியாவே ஆதிக்கம் செலுத்தியது. 11-ஆவது நிமிடத்தில் கிடைத்த முதல் பெனால்டி காா்னா் வாய்ப்பிலேயே ஹா்மன்பிரீத் சிங் தவறாமல் கோலடித்தாா். ஆட்டத்தின் முதல் பாதி முடிவு நெருங்கி வந்த நிலையில் 25-ஆவது நிமிடத்தில் லலித் உபாத்யாய் அருமையாக ஒரு கோல் அடித்தாா். இதனால் முதல் பாதி முடிவிலேயே இந்தியா 2-0 என முன்னிலை பெற்றுவிட்டது.

2-ஆவது பாதி ஆட்டத்தின் இறுதியில் மன்தீப் சிங்கும் தனது பங்கிற்கு 58-ஆவது நிமிடத்தில் கோல் அடித்தாா். இடையே இரு முறை ஆா்ஜென்டீன முன்கள வீரா் மாா்டின் ஃபெரெய்ரோ அதிரடியாக கோலடிக்க முயற்சி செய்ய, இந்திய கோல்கீப்பா் கிருஷண் பகதூா் பாதக் அதை அரண்போல் தடுத்தாா். இதனால் இறுதியில் இந்தியா 3-0 என்ற கோல் கணக்கில் வென்றது.

அடுத்ததாக, பிரிட்டன் பயணிக்கும் இந்திய அணி, மே 8 மற்றும் 9-ஆம் தேதிகளில் அந்நாட்டு அணியுடன் இரு ஆட்டங்களில் விளையாடுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

டாடா மோட்டாா்ஸின் சா்வதேச விற்பனை 3,77,432-ஆக அதிகரிப்பு

SCROLL FOR NEXT