விளையாட்டு

மும்பை - பெங்களூரு அணிகளுக்கு இடையிலான  ஆட்டம் சமன்: சூப்பர் ஓவரில் முடிவு

DIN

மும்பை - பெங்களூரு அணிகளுக்கு இடையிலான டி-20  ஆட்டம் சமனில் முடிந்தது.

13-வது ஐபிஎல் சீசனின் 10-வது ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடி ன. டாஸ் வென்ற மும்பை கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதன்படி, முதலில் பேட் செய்த பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்கள் குவித்தது.

பெங்களூரு பேட்டிங்: 

தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரோஹித் சர்மா, குயின்டன் டி காக் களமிறங்கினர். முதல் ஓவரில் 14 ரன்கள் எடுத்து அதிரடியாக தொடங்கினாலும், வாஷிங்டன் சுந்தர் வீசிய 2-வது ஓவரில் ரோஹித் ஆட்டமிழந்தார். தொடர்ந்து களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் ரன் ஏதும் எடுக்காமல் உடானா பந்தில் ஆட்டமிழந்தார்.

அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்ததால், டி காக் மற்றும் இஷன் கிஷன் நிதானம் காட்டி விளையாடினர். ஆனால், பவர் பிளே முடிந்த கையோடு டி காக் 14 ரன்களுக்கு சஹால் சுழலில் ஆட்டமிழந்தார்.

இதையடுத்து, ஹார்திக் பாண்டியா களமிறக்கப்பட்டார். அவரும் பெரிதளவில் அதிரடி காட்டாமல் 15 ரன்களுக்கு ஸாம்பா சுழலில் ஆட்டமிழந்தார்.

எனினும் கிஷன் மட்டும் பவுண்டரிகள் அளித்து அரைசதத்துடன் நம்பிக்கையளித்து வந்தார். போலார்ட் நிதானம் காட்டி அவருக்கு ஒத்துழைப்பு தந்தார். வேகப்பந்துவீச்சை கிஷன் எதிர்கொண்டு அதிரடி காட்டினார். எனினும், மும்பை வெற்றிக்கு கடைசி 4 ஓவர்களில் 84 ரன்கள் தேவை என்ற நிலை இருந்தது.

17-வது ஓவரை ஸாம்பா வீசினார். இந்த ஓவரின் 6 பந்துகளையும் எதிர்கொண்ட போலார்ட் 3 சிக்ஸர்கள் 1 பவுண்டரி உள்பட 27 ரன்கள் எடுத்தார். 18-வது ஓவரை சஹால் வீசினார். அந்த ஓவரில் போலார்ட் 2 சிக்ஸர்கள், கிஷன் 1 சிக்ஸர் அடிக்க 22 ரன்கள் கிடைத்தன. இதன்மூலம், போலார்டும் 20-வது பந்தில் அரைசதத்தை எட்டினார். முதல் 10 பந்துகளில் 11 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த அவர், அடுத்த 10 பந்துகளில் 39 ரன்களை எடுத்தார்.

கடைசி 2 ஓவர்களில் 31 ரன்கள் தேவைப்பட்டன. 19-வது ஓவரை சைனி வீசினார். இந்த ஓவரில் 1 சிக்ஸர் மட்டுமே போக 12 ரன்கள் மட்டுமே கிடைத்தன. 

இதனால், கடைசி ஓவரில் வெற்றிக்கு 19 ரன்கள் தேவைப்பட்டன. கடைசி பந்தில் பொலார் பவுண்டரி விளாசினார். இதனையடுத்து சூப்பர் ஓவர் முடிவு தீர்மானிக்கப்பட உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும்: இபிஎஸ்

தேசிய ஜனநாயகக் கூட்டணி அமோக வெற்றி பெறும்: ராமதாஸ்

ஒரே நேரத்தில் வாக்களித்த மும்மதத்தைச் சேர்ந்த தோழிகள்

முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் உயர குரல் கொடுப்பேன்: தங்க தமிழ்செல்வன்

SCROLL FOR NEXT