விளையாட்டு

'கோலியை விமர்சித்த கவாஸ்கர், கேள்வி எழுப்பிய அனுஷ்கா'

25th Sep 2020 06:35 PM

ADVERTISEMENT

விராட் கோலியின் விளையாட்டு குறித்து தரக்குறைவான விமர்சனம் செய்ததாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கரை அவரது மனைவியும், நடிகையுமான அனுஷ்கா சர்மா விமரிசித்து கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி நடப்பாண்டு ஐ.பி.எல். போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு தலைமை தாங்கி விளையாடி வருகிறார். இதனிடையே நேற்று (வியாழக்கிழமை) பஞ்சாப் அணிக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில் விராட் கோலி தடுமாற்றமான ஆட்டத்தை  வெளிப்படுத்தினார்.  இதனால் ராஜஸ்தான் அணி தோல்வியைத் தழுவியது.

இதில் கிரிக்கெட் விமர்சனத்தின்போது கேப்டன் விராட் கோலி குறித்து தரக்குறைவாக பேசியதாக அவரது மனைவி அனுஷ்கா சர்மா குற்றம் சாட்டியுள்ளார்.

விராட் கோலியின் தடுமாற்றமான ஆட்டம் குறித்து விமர்சித்த சுனில் கவாஸ்கர், ''விராட் கோலி எவ்வளவு சிறப்பாக பயிற்சி செய்கிறார் என்பதை அவர் அறிவார். தற்போது இந்தியாவில் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. எனவே அவர் மனைவி அனுஷ்கா சர்மாவின் பந்துகளை எதிர்கொள்ளுவதற்காக மட்டுமே பயிற்சி பெற்றுள்ளார். அது ஆட்டத்தில் உதவாது'' என்று விமரிசித்துள்ளார்.

ADVERTISEMENT

சுனில் கவாஸ்கரின் இந்த பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வந்த நிலையில், விராட் கோலியின் மனைவியும், நடிகையுமான அனுஷ்கா சர்மா இது குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக பதிவிட்டுள்ள அவர், மரியாதைக்குரிய சுனில் கவாஸ்கர் அவர்களே, உங்களது விமர்சனம் மரியாதைக் குறைவான விதத்தில் உள்ளது.  விளையாட்டு வீரனின் கணவரது விளையாட்டிற்கு மனைவியை குற்றவாளியாக்கி தரக்குறைவாக பேசும் உங்களது எண்ணம் குறித்து நீங்கள் விளக்கமளிக்க வேண்டும்.

இதுநாள் வரையான உங்களது கிரிக்கெட் விமர்சனத்தில் அனைத்து கிரிக்கெட் வீரர்களின் தனிப்பட்ட வாழ்க்கைக்கும் நீங்கள் மரியாதை அளித்துள்ளீர்கள். அதே அளவு மரியாதையை நீங்கள் எனக்கும், எங்கள் இருவருக்கும் அளித்துள்ளீர்களா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

நேற்றிரவு முதல் எனது கணவரின் செயல்திறனைப் பற்றி கருத்து தெரிவிக்க உங்கள் மனதில் வேறு பல சொற்களையும், வாக்கியங்களையும் வைத்திருப்பீர்கள் என்று நம்பிகிறேன் அல்லது எனது கணவரின் விளையாட்டில் எனது பெயரைப் பயன்படுத்தினால் மட்டுமே உங்கள் விமர்சனம் பொருத்தமானவையா? என்று அனுஷ்கா சர்மா கேள்வி எழுப்பியுள்ளார்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT