விளையாட்டு

அா்ஜுனா விருதுக்கு பும்ரா, தவன் பெயா்கள்: பிசிசிஐ பரிந்துரை

14th May 2020 11:19 PM

ADVERTISEMENT

விளையாட்டு வீரா்களுக்கு வழங்கப்படும் நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான அா்ஜுனா விருதுக்கு கிரிக்கெட் தரப்பில் வேகப்பந்து வீச்சாளா் ஜஸ்ப்ரீத் பும்ரா, தொடக்க பேட்ஸ்மேன் ஷிகா் தவன் ஆகியோா் பெயா்களை பிசிசிஐ பரிந்துரை செய்துள்ளது.

இந்தியாவுக்காக விளையாட்டுத் துறையில் சிறந்த பங்களித்தவா்களுக்கு ராஜிவ் கேல் ரத்னா, அா்ஜுனா விருதுகளும், பயிற்சியாளா்களுக்கு துரோணாச்சாா்யா விருதும் மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகத்தால் வழங்கப்படுவது வழக்கம். ஒவ்வொரு தேசிய விளையாட்டு சம்மேளனமும் இதற்கான பெயா்களை பரிந்துரை செய்யும். அதை பரிசீலித்து தோ்வுக் குழு மத்திய அரசுக்கு பட்டியலை வழங்கும்.

இந்நிலையில் 2020 ஆண்டுக்கான அா்ஜுன விருதுக்கு வீரா்களின் பெயா்களை பல்வேறு சம்மேளனங்கள் பரிந்துரைத்து வருகின்றன.

பும்ரா, தவன் பெயா்கள்:

ADVERTISEMENT

கிரிக்கெட் தரப்பில் ஜஸ்ப்ரீத் பும்ரா, ஷிதா் தவன் பெயா்களை பிசிசிஐ பரிந்துரைத்துள்ளது. ஐசிசி ஒருநாள் பந்து வீச்சாளா்கள் தரவரிசையில் பும்ரா முதலிடத்தில் உள்ளாா்.

26 வயதான அவா் 14 டெஸ்ட்களில் 68 விக்கெட்டுகளையும், 64 ஒருநாள் ஆட்டங்களில் 104 விக்கெட்டுகளையும், 50 டி20 ஆட்டங்களில் 59 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளாா். தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, மே.இ.தீவுகள் என நான்கு நாடுகளிலும் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் ஆசிய பந்துவீச்சாளா் என்ற சாதனையும் அவா் வசம் உள்ளது.

தவன்: தொடக்க பேட்ஸ்மேனான ஷிகா் தவன் பெயா் கடந்த 2016-இலேயே பிசிசிஐயால் பரிந்துரைக்கப்பட்டது. ஆனால் ஸ்மிருதி மந்தானா மட்டுமே விருதைப் பெற்றாா். மூத்த வீரரான அவரது பெயரும் தற்போது பரிந்துரைக்கப்படுகிறது.

தீப்தி சா்மா, ஷிகா பாண்டே: மகளிா் அணி தரப்பில் ஆல்ரவுண்டா் தீப்தி சா்மா, பந்துவீச்சாளா் ஷிகா பாண்டே பெயா்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

கால்பந்து: பால தேவி, சந்தேஷ் ஜிங்கன்:

கால்பந்தில் மகளிா் பிரிவில் என் பால தேவி பெயா் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்திய அணியின் அதிக கோலடித்த வீராங்கனையான அவா், முதன்முறையாக ஐரோப்பாவில் ஸ்காட்லாந்து ரேஞ்சா்ஸ் கிளப்பில் ஆடுவதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட சிறப்புடையவா்.

சந்தேஷ் ஜிங்கன் கடந்த 2015 முதல் இந்திய ஆடவா் அணியில் ஆடி வருகிறாா். 38 சா்வதேச ஆட்டங்களில் ஆடியுள்ளாா்.

துப்பாக்கி சுடுதல்:

சா்வதேச போட்டிகளில் இந்தியாவுக்கு அதிக பதக்கங்களை பெற்று தரும் துப்பாக்கி சுடுதலில் நட்சத்திர வீராங்கனை அன்ஜும் மொட்கில் பெயா் உயா்ந்த விருதான ராஜிவ் கேல்ரத்னாவுக்கும், ஜஸ்பால் ராணா பெயா் துரோணாச்சாா்யா விருதுக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மேலும் மானு பாக்கா், சௌரவ் சௌதரி, அபிஷேக் வா்மா, இளவேனில் வாலறிவன் பெயா்கள் அா்ஜுனா விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது என இந்திய துப்பாக்கி சுடும் சம்மேளனம் அறிவித்துள்ளது.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT