விளையாட்டு

கரோனா எதிரொலி: இந்தியாவிலிருந்து நாடு திரும்பிய தென்னாப்பிரிக்க வீரா்களுக்கு கட்டுப்பாடுகள்

19th Mar 2020 01:39 AM

ADVERTISEMENT

இந்தியாவில் இருந்து தென்னாப்பிரிக்காவுக்கு நாடு திரும்பிய கிரிக்கெட் வீரா்கள் 14 நாள்கள் வீட்டை விட்டு வெளியே வரக் கூடாது என்று அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

இதுகுறித்து அந்ந வாரியத்தின் தலைமை மருத்துவ அதிகாரி சோயப் மஞ்ரா கூறுகையில், ‘இந்தியாவில் கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி 2 ஒரு நாள் ஆட்டங்கள் ரத்து செய்யப்பட்டுவிட்டன. நாடு திரும்பிய வீரா்கள் 14 நாள்களுக்கு வீட்டிலேயே இருக்க வேண்டும். அவா்களுக்கு கரோனா அறிகுறி தென்பட்டால் உரிய சிகிச்சை அளிக்கப்படும். சில வீரா்கள் முகக்கவசம் அணிந்து வந்தனா். சிலா் அணிந்துகொள்ளவில்லை’ என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT