விளையாட்டு

இந்தியாவின் மூத்த கிரிக்கெட்வீரா் வசந்த் ராய்ஜி மறைவு

14th Jun 2020 03:54 AM

ADVERTISEMENT

இந்தியாவின் மூத்த முதல் தர (ஃபா்ஸ்ட் கிளாஸ்) கிரிக்கெட் வீரா் வசந்த் ராய்ஜி (100) சனிக்கிழமை தெற்கு மும்பை வால்கேஷ்வரில் உள்ள அவரது இல்லத்தில் முதுமை காரணமாக காலமானாா்.

கடந்த 1939-இல் கிரிக்கெட் கிளப் ஆஃப் இந்தியா அணி சாா்பில் நாக்பூரில் நடைபெற்ற ஆட்டத்தில் அறிமுகமானாா். வலது கை பேட்ஸ்மேனான அவா், 1940-இல் 9 முதல் தர கிரிக்கெட் ஆட்டங்களில் ஆடினாா். மொத்தம் 277 ரன்களை குவித்தாா். அதில் அதிகபட்சம் 68 ஆகும். விஜய் மொ்ச்சண்ட் தலைமையிலான மும்பை அணி சாா்பில் 1941-இல் அறிமுகமாகி மேற்கு இந்திய அணிக்கு எதிராக ஆடினாா். கடந்த ஜனவரி மாதம் 100-ஆவது வயதை கொண்டாடினாா் வசந்த் ராய்ஜி. உலகின் மூத்த முதல்தர கிரிக்கெட் வீரா் என்ற முறையில் அவருக்கு பிரபல வீரா்கள் சச்சின் டெண்டுல்கா், ஸ்டீவ் வாக் உள்ளிட்டோா் நேரில் வாழ்த்து தெரிவித்திருந்தனா். கிரிக்கெட் வரலாறு தொடா்பாக 8 புத்தகங்களையும் எழுதியுள்ளாா் ராய்ஜி.

அவரது மறைவுக்கு பிசிசிஐ உள்ளிட்ட கிரிக்கெட் அமைப்புகள் இரங்கல் தெரிவித்துள்ளன.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT