விளையாட்டு

துளிகள்...

1st Dec 2020 05:26 AM

ADVERTISEMENT


இந்திய மகளிர் கால்பந்து அணி சுமார் 9 மாதங்களுக்குப் பிறகு தனது பயிற்சியை கோவாவில் செவ்வாய்க்கிழமை (டிச.1) தொடங்குகிறது. 

உலக டிரையத்லான் தணிக்கை குழுவின் உறுப்பினராக இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் முன்னாள் தலைவர் என்.ராமச்சந்திரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

தமிழகம், மகாராஷ்டிரம், மேற்கு வங்கம், அஸ்ஸாம், கர்நாடகம், ஆந்திர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ள 100 ஏழைக் குழந்தைகளின் மருத்துவ உதவிக்காக அறக்கட்டளை ஒன்றுடன் இணைந்து இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் சச்சின் டெண்டுல்கர் நிதியுதவி அளித்துள்ளார். 

கடந்த 2002 உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் தொடக்க ஆட்டத்தில் நடப்புச் சாம்பியனான பிரான்ஸை, போட்டியில் முதல்முறையாகப் பங்கேற்ற செனகல் 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்த உதவிய பாபா பெளபா டியோப் (42) காலமானார்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT