விளையாட்டு

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றார் ரபேல் நடால்!

7th Sep 2019 04:07 PM

ADVERTISEMENT

 

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில், ரஷ்ய வீரர் மெத்வதேவை வீழ்த்தி ஸ்பெயின் நட்சத்திர வீரர் ரபேல் நடால் இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளார். இந்தப்போட்டியில் வெற்றி பெறுவதன் மூலம் நடால் தனது 19வது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை கைப்பற்றுவார்.

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் போட்டிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. நேற்று இரவு ஆடவர் ஒற்றையர் அரையிறுதிப் போட்டியில், ஸ்பெயின் நாட்டின் ரபேல் நடால் மற்றும் இத்தாலியின் மேட்டியோ பிரிட்டினி மோதினர். போட்டியின் இறுதியில் ரபேல் நடால் 7-6, 6-4, 6-1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். 

அதேபோன்று மற்றொரு அரையிறுதிப் போட்டியில், ரஷ்ய வீரர் மெத்வதேவ் மற்றும் பல்கேரிய வீரர் திமித்ரோ மோதிய போட்டியில் மெத்வதேவ்
7-6, 6-4, 6-3 என்ற செட்கணக்கில் வெற்றி பெற்றார். இதைத்தொடர்ந்து நாளை மறுநாள்(செப்.9) நடைபெறவுள்ள இறுதிப்போட்டியில், நடால் மற்றும் மெத்வதேவ் மோதவுள்ளனர். 

ADVERTISEMENT

இதுவரை 18 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை தன்வசம் வைத்துள்ள நடால், இந்தப் போட்டியில் வெற்றி பெற்றால் 19வது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வெல்வார். மேலும், ஒரு போட்டியில் வெற்றி பெறும் பட்சத்தில் அவர், 20 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்ற பெடரரின் சாதனையை சமன் செய்வார். 

Tags : அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி US Open ரபேல் நடால் Rafael Nadal Roger Federer
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT