தேவையானவை:
மாதுளை முத்துக்கள் - 2 கிண்ணம்
பச்சரிசி - முக்கால் கிண்ணம்
பனங்கற்கண்டு - அரை கிண்ணம்
முந்திரி, பாதாம் - தலா 10
நெய் - 2 தேக்கரண்டி
செய்முறை:
பச்சரிசியை, வாணலியில் சிவக்க வறுத்துக் கொள்ளவும். பின்னர், மாதுளம் முத்துக்களை மிக்சியில் அரைத்து சாறு எடுத்து வடிகட்டிக் கொள்ளவும். பனங்கற்கண்டுடன் 2 கிண்ணம் தண்ணீர் சேர்த்து, அடுப்பில் வைக்கவும். கரைந்ததும் வடிகட்டிக் கொள்ளவும். முந்திரி, பாதாமை, கரகரப்பாக பொடிக்கவும். ப்ரெஷர் பேனில், பச்சரிசி, மாதுளம் சாறு, பனங்கற்கண்டு, தண்ணீர், பொடித்த பாதாம், முந்திரி, நெய் சேர்த்து கலக்கவும். 3 விசில் விடவும். பின்னர், திறந்து, நன்கு கிளறி, மாதுளம் முத்துக்களால் அலங்கரித்து பரிமாறவும்.
ADVERTISEMENT