நூல் அரங்கம்

காப்பி அடிக்கலாம் வாங்க!

2nd Oct 2023 11:48 AM

ADVERTISEMENT

காப்பி அடிக்கலாம் வாங்க! - கே.கணேசன்; பக்.88; ரூ.100; வர்ஷினி புக்ஸ், சென்னை-63; ✆ 98401 38767.
 குழந்தைகள் இலக்கியத்தில், அறிவியல் படைப்பில் தனி முத்திரை பதித்த நூலாசிரியரின் மற்றுமொரு நல்லதொரு நூல். "காப்பி' அடிப்பது தவறா? தவறில்லை என்று வாதிடும் நூலாசிரியர், பரீட்சை தவிர வேறு எங்கே வேண்டுமானாலும் காப்பி அடிக்கலாம். சிறந்த மனிதர்களின் நல்ல குணங்களைக் காப்பி அடித்து , தன்னையும் தன்னுடைய குணங்களையும் மாற்றிக் கொள்ளலாம் என்கிறார் நூலாசிரியர்.
 2017-ஆம் ஆண்டில் வெளியான நூல் அண்மையில் ஏழாம் பதிப்பை கண்டுள்ளது.
 மகாத்மா காந்தி, பில் கேட்ஸ், ஆங் சான் சூகி, விவேகானந்தர், எட்மண்ட் ஹிலாரி, விளையாட்டு வீரர் வீர்தவல் விக்ரம் கடே, நெல்சன் மண்டேலா, அன்னை தெரசா, லான்ஸ் ஆம்ஸ்ட்ராங், கபில்தேவ், ரைட் சகோதரரர்கள், அம்பேத்கர், பார்வையற்றோர் படிக்க எழுத்துகளைக் கண்டறிந்த லூயி பிரெய்ல், பிளாரன்ஸ் நைட்டிங்கேல், ஹெலன் கெல்லர், வ.உ.சிதம்பரனார், சோய்ச்சிரோ ஹோண்டோ, ஜவாஹர்லால் நேரு உள்ளிட்ட பிரபலங்களின் வாழ்க்கையில் நடைபெற்ற சுவாரசிய சம்பவங்கள் தொகுக்கப்பட்டுள்ளன.
 இந்த ஆளுமைகள் அனைவருமே குழந்தைகளின் கனவு நாயகர்கள்தான். அவர்கள் தங்களது வாழ்க்கையில் கிடைத்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி முன்னேறி இருக்கிறார்கள். அவர்களின் உழைப்பு, சிந்தனை, ஒழுக்கம், கல்வி கற்றல், மன உறுதி, சேவை மனப்பான்மை போன்றவற்றை நாம் ஏன் காப்பி அடிக்கக் கூடாது என்றே நூலாசிரியர் கேள்வி எழுப்புகிறார். இளம்தலைமுறையினர் சாதனை படைக்க, உத்வேகம் அளிக்கும் நூல் இது.

ADVERTISEMENT
ADVERTISEMENT