நூல் அரங்கம்

வன்புணர்வே ஆயுதமாய்

15th May 2023 06:20 PM

ADVERTISEMENT

வன்புணர்வே ஆயுதமாய் (இந்தியப் பாலியல் வழக்குகளின் காலக்கோடு) - பேரா. எஸ்.ஆர்.விவேகானந்தம்;  பக்.504; ரூ.666; வானவில் புத்தகாலயம்,  சென்னை-17; ✆ 044- 2986 0070.

நாட்டில் இரண்டு நிமிடங்களுக்கு  ஒரு பாலியல் வன்முறை நிகழ்கிறது. வெளிநாடுகளில் பாலியல் தொடர்பாக ஆராய்ச்சிகளில் பலர் ஈடுபடும் நிலையில், அதுதொடர்பான விழிப்புணர்வு நம் நாட்டில் இல்லை. இந்த நிலையைப் போக்கவும், பாலியல் குற்றங்களைத் தடுப்பதற்காகவும்,  சிறுமிகளுக்கு பெற்றோர் அறிவுறுத்த வேண்டிய அறிவுரைகள், குற்றங்களைத் தடுப்பதற்கான வழிமுறைகள்.. என்று சரியானதொரு விழிப்புணர்வை இந்த நூல் ஏற்படுத்தியிருக்கிறது.

பெண்ணாக இருப்பது குற்றமா?, பெண் குறித்த பார்வைகள்,  சமூக வலைதளங்களில் அணுக வேண்டிய முறைகள், திரைப்படங்களில் பாலுணர்வு, விழிப்புணர்வு குறும்படங்களும் ஆவணப் படங்களும்,  ஆண்கள் ரேபிஸ்ட் ஆவதற்கான காரணம், பாலியல் குற்றங்களுக்கான சட்டத்தின் பார்வையும் தீர்வுகளும்...என்று பாலியல் தொடர்பான நல்லதொரு விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கிறது.

இலங்கையில் 1980-களின் இறுதியில் தமிழ்ப்பெண்களின் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் வன்முறை, 2002-இல் குஜராத் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தையடுத்து நிகழ்ந்த பாலியல் வன்முறைகள்,  தருமபுரி மாவட்டம் வாச்சாத்தி சம்பவம்,  உன்னாவ் வழக்கு,  தில்லி மாணவி நிர்பயா வழக்கு, பெங்களூரு-மும்பை, ஹைதராபாதில் இளம்பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள்... என நாட்டை உலுக்கிய பாலியல் வழக்குகள் குறித்த கட்டுரைகளும் நூலில் இடம்பெற்றுள்ளன.

ADVERTISEMENT

பெண்களை கண்ணியத்துடனும் மரியாதையுடனும் நடத்துவதை கற்றுத் தருவதே உண்மையான பாலியல் கல்வியாக இருக்க முடியும்; அது நம் வீடுகளில் இருந்து தொடங்க வேண்டும் என்று நூல் எடுத்தியம்புகிறது. வீட்டின் அலமாரியில் அவசியம் இருக்க வேண்டிய நூல் இது.

ADVERTISEMENT
ADVERTISEMENT