நூல் அரங்கம்

பேரரசி

DIN

பேரரசி -  மோகன ரூபன்; பக். 464; ரூ. 500; அபிநயா பிரசுரம், சென்னை- 17; ✆ 97910 71218.

'பேரரசி' என்ற சொல்லுக்கேற்ப வாழ்ந்தவர் பிரிட்டிஷ் மகாராணி இரண்டாம் எலிசபெத்.  70 ஆண்டுகள் ஒரு சாம்ராஜ்ஜியத்தின் தலைமகளாகத் திகழ்ந்தவர். 

அண்மையில் மறைந்த அவர், மேலும் ஓரிரு ஆண்டுகள் வாழ்ந்திருந்தால், நூறாவது பிறந்த நாள் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டிருக்கும். அவரது ஜனனம் தொடங்கி மரணம் வரையிலான வாழ்க்கை ஓட்டத்தை 81 தலைப்புகளில் விரிவாகப் பேசுகிறது இந்த நூல்.  இரண்டாம் உலகப் போர் கற்றுத்தந்த துணிச்சலான பாடங்கள், குடும்ப விவகாரங்களைக் கையாண்ட விதம், பிறரிடம் அன்புடன் பழகும் பண்பு என அத்தனையையும் அழகாகவும், முழுமையாகவும் எடுத்துரைக்கிறார் நூலாசிரியர்.

'நிலச்சரிவில் சிக்கி 116 குழந்தைகள், 28 பெரியவர்கள் உயிரிழந்தபோது, தான் உடனே சென்றால் அதிகாரிகள் தன்னைப் பாதுகாப்பதில்தான் கவனம் செலுத்துவர்; மீட்புப் பணிகள் பாதிக்கப்படும்' என்பதால் காலம் தாழ்த்திச் சென்றதும், பின்னர் ஒரு சந்தர்ப்பத்தில்,  பாதிக்கப்பட்டோரின் துயரத்தில் உடனடியாகப் பங்கேற்காமல் காலம் தாழ்த்தி சென்றிருக்கக் கூடாது என வருந்தியதும் அவரது மனித நேயத்துக்கு எடுத்துக்காட்டு.

அரியாசனத்தை அலங்கரித்தாலும் தன்னைக் காணவந்த முன்பின் அறியா சனங்களுடன் கைகோத்து நடனமாடிய சம்பவத்தை நினைவுகூர்ந்து 'மகிழ்ச்சி அலையில் அடித்துச் செல்லப்பட்டேன்' எனக் கூறியது அவரது பேரன்பை வெளிப்படுத்துகிறது. 

காதல், துயரங்கள், சோதனைகள், நகைச்சுவை உணர்வு, இணையற்ற ஆளுமை, சுற்றுப்பயணங்கள்,  புதுப்புது தகவல்கள் என, நூலை வாசித்து முடிக்கையில் நவரசம் ததும்பும் பிரமாண்டமான திரைப்படத்தைப் பார்த்த நிறைவும், வியப்பும் மேலிடுவதை மறுக்க இயலாது.  படிப்பதற்காக  எடுத்தால் முடித்துவிட்டே வைக்கச் செய்ய வேண்டும் என சூளுரை கொண்டு எழுதியதைப் போல் சுண்டியிழுக்கிறது நூலாசிரியரின் நடை. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சித்த மருத்துவம் படித்துவிட்டு அலோபதி சிகிச்சை அளித்த மருத்துவா் கைது

மாவட்டத்தில் தோ்தல் பணிகள் தொடா்பான ஆய்வுக் கூட்டம்

நிதி நிறுவன ஊழியரிடம் வழிப்பறி: 2 சிறுவா்கள் உள்பட 6 போ் கைது

சிறைவாசிகளுக்கு சிறப்பு நீதிமன்றம்: 5 போ் விடுதலை

வாக்குச் சாவடி மையங்களின் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு

SCROLL FOR NEXT