நூல் அரங்கம்

இஸ்லாமும் ஆளுமையும்

6th Feb 2023 01:13 PM

ADVERTISEMENT

இஸ்லாமும் ஆளுமையும்- ஏ.ஆர்.அப்துல் கனி; பக்.160; ரூ.140; சாஜிதா புக் சென்டர், சென்னை-1; 98409 77758.
 இஸ்லாம் மதம், முஸ்லிம் வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டியவை என்பது குறித்து 8 அத்தியாயங்களில் சுருக்கமாக, பாமரரும் புரியும் வண்ணம் எளிய தமிழ் நடையில் விளக்கப்பட்டுள்ளது. இஸ்லாம் உருவாக்க விரும்பும் ஆளுமை- வழிமுறைகள், மனித படைப்பில் ஆன்மா- உள்ளங்களின் பங்களிப்புகள், குர்ஆன் விளக்குவது, இறைதூதரின் ஆளுமைப் பண்புகள், முஸ்லிம்களின் கடமைகள், இஸ்லாம் அகற்ற விரும்பும் தீய குணங்கள், காழ்ப்புணர்ச்சிகளின் கிளைகள் உள்ளிட்ட தலைப்புகளில் உள்ள கட்டுரைகள் உலக வாழ்க்கையில் தனி மனிதன் எவ்வாறு வாழ வேண்டும் என்பதை இஸ்லாம் போதிக்கிறது என்பதை நூலாசிரியர் விவரித்துள்ளார்.
 பொருளீட்டல், வட்டி, அபகரிப்பு, மோசடித்தனம், லஞ்சம் போன்றவை குறித்த கட்டுரைகள் இன்றைய நடைமுறை வாழ்க்கையில் பெரும்பாலானோர் படித்து பின்பற்றினால் நல்லதொரு உலகம் மலரும் என்று அன்றே இஸ்லாம் வழிகாட்டியிருக்கிறது என்பதை அறிய முடிகிறது.
 மது, சூதாட்டம் போன்றவற்றை இஸ்லாம் எதிர்ப்பதன் காரணத்தை நூலாசிரியர் விவரித்திருப்பது தவறிழைக்க நினைப்போருக்கு எச்சரிக்கை மணியாக இருக்கிறது.
 வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய முக்கிய பண்புகள், தியாகம், பொறுமை, உறுதிப்பாடு, நம்பிக்கை போன்றவற்றை பின்பற்றினால் நல்லதொரு சமுதாயத்தை உருவாக்கலாம் என்பதை நூலாசிரியர் நயம்பட தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT