நூல் அரங்கம்

மண் அளக்கும் சொல்

26th Sep 2022 02:32 PM

ADVERTISEMENT

மண் அளக்கும் சொல் - ஆசி.கந்தராஜா; பக். 183; ரூ.225; காலச்சுவடு பதிப்பகம், 669, கே.பி. சாலை, நாகர்கோவில்- 629001.

வேளாண்மை உயிரியல் தொடர்பாக தாம் எழுதிய புனைவுக் கட்டுரைகளில் 13 கட்டுரைகளைத் தேர்வு செய்து நூலாகத் தொகுத்திருக்கிறார் நூலாசிரியர்.  ஜனரஞ்சக அறிவியலையும் புனைவு வடிவத்தையும் ஒன்றிணைத்து எழுதப்பட்ட கட்டுரைகள் இவை.  சாத்தானின் விரல்கள், வீரசிங்கம் பயணம் போகிறார், ஒட்டுக்கன்றுகள், கற்பக விருட்சம், சீன நாட்டு நண்பர்களும் எருமை மாட்டுப் புல்லும் என அனைத்துக் கட்டுரைகளிலும் தாவரங்களின் சிறப்புகளும், மண்ணின் மகத்துவமும் ஆங்காங்கே பரவிக் கிடப்பதைப் பார்க்க முடிகிறது.

'மரங்களும் நண்பர்களே' என்ற கட்டுரையில் நிறைய மரங்கள் வருகின்றன. மாமரங்களை எப்படி நட வேண்டும் என்பதையும்  அவற்றை எப்படி கவாத்துப் பண்ண வேண்டும் என்கிற செய்முறையையும் ஒன்பதாம் வகுப்புச் சிறுவனான கந்தராஜாவுக்கு விளக்குகிறார் ஆச்சி. கவாத்து என்பது கண்டபடி வெட்டி எறிவதில்லை, அது அந்தத் தாவரத்தின் உடல் தொற்பாட்டுக்கும் காலநிலைக்கும் இயைந்ததாக இருக்க வேண்டும். அடுத்து வருவது வாழை; வாழையில் மகரந்தச் சேர்க்கை இல்லாமலேயே வாழைக்காய்கள் எப்படி உருவாகின்றன என விளக்குகிறார் வேதவல்லி அக்கா.

 இதில் உள்ள கட்டுரைகள் அறிவியல் உண்மைகளைப் புரிந்து கொள்வதற்காகவும் எழுதப்பட்டவை. நூலாசிரியர் புனைவு என்கிற வடிவத்தை அறிவியலைச் சொல்லும் வெறும் ஊடகமாக மட்டும் பயன்படுத்தவில்லை. அந்தப் புனைவில் நம்பகத்தன்மையும் இருக்கிறது.  இது தாவரங்களை நிமித்தமாகக் கொண்டு மனிதர்களின் மெய்யுரைத்த நூல் இது. வேளாண்மையை நேசிப்பவர்களுக்கு ஏற்ற நூல் இது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT