நூல் அரங்கம்

வடலிவிளை செம்புலிங்கம்

19th Sep 2022 01:17 PM

ADVERTISEMENT

வடலிவிளை செம்புலிங்கம் - தாமரை செந்தூர்பாண்டி; பக். 376; ரூ.320; சிவகாமி புத்தகாலயம், படப்பை, காஞ்சிபுரம் (மா.); 95516 48732.

தென் மாவட்டங்களில் விழாக்காலங்களில் இன்றும் ஒலித்துக் கொண்டிருக்கும் பல பாடல்களுக்குச் சொந்தக்காரர் சுயம்புலிங்கம் (எ) வடலிவிளை செம்புலிங்கம்.  தென் மாவட்டங்களின் ராபின்வுட்டாக வலம் வந்தவர். 

செம்புலிங்கம், அவரது நண்பர்கள் நட்பாய் ஒன்றாய் இருந்த இளமைக்காலம் முதல் இறுதி நாள்கள் வரை "திருநெல்வேலி தமிழ்' மணக்க உரையாடல்களாய் பக்கத்துக்கு பக்கம் சுவாரசியத்துடன் நூலாசிரியர் எழுதியுள்ளது சிறப்பு.

தனது நண்பர் காசியின் தலை மீது எலுமிச்சை பழத்தை வைத்து துப்பாக்கியால் சுடுவது,  25 அடி நீளக் கிணற்றைத் தாண்டுதல்,  மான் வேட்டைக்குச் செல்லுதல், வீர விளையாட்டுகளை மேற்கொள்ளுதல் பயிற்சி அளித்தல் போன்ற செம்புலிங்கத்தின் மறுபக்கம்  மெய் சிலிர்க்க வைக்கிறது.

ADVERTISEMENT

கொள்ளையடித்த பணத்தில் ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போராடிய வீரர்களுக்கு உதவுதல், சுதேசி ஆடைகளை அணிதல் போன்றவை அவரது நாட்டுப்பற்றை காட்டுகிறது.  

செம்புலிங்கம் காதல் வயப்படுதலும் உரையாடல்களும் ரசனை கூட்டுகிறது.  செம்புலிங்கத்தை போலீஸார் பிடித்துச் செல்வதும், நான்குனேரி சிறையில் இருந்து அவர் தப்பிப்பதும், கொழும்புக்கு செல்ல இருந்த நிலையில் அவரை போலீஸார் சுட்டுக்  கொல்வதும், நேரில் பார்த்த உணர்வு ஏற்படுகிறது. தவறாக எண்ணப்படுபவர்களின் மறுபக்கத்தையும் அறிய வேண்டிய எண்ணத்தை ஏற்படுத்துகிறது இந்த நூல்.

ADVERTISEMENT
ADVERTISEMENT