நூல் அரங்கம்

வாசிக்க வாங்க

5th Sep 2022 12:58 PM

ADVERTISEMENT

வாசிக்க வாங்க - க.ப. அறவாணன்; பக். 112; ரூ.120; தமிழ்க் கோட்டம், சென்னை-29; 95977 17485.

சமூக வலைதளங்களின் ஆதிக்கம் பெருகிவிட்ட இந்தக் காலத்தில் இந்தியாவில் புத்தக வாசிப்புக் குறைந்துவிட்டது.  இருப்பினும்,  வளரும் நாடுகளில் வாசிப்பின் மீதான நேசம் குறையாததை நெல்லை மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலை. முன்னாள் துணைவேந்தரான நூலாசிரியர் பல்வேறு எடுத்துக் காட்டுகளுடன் இந்நூலில் விளக்கியுள்ளார்.

வாசிப்பை முன்னெடுத்துச் செல்ல பிற நாடுகளில் உள்ள வசதிகளையும் குறிப்பிட்டு அனைவரின் கவனத்தை ஈர்த்த திரையரங்குகள் மூடப்பட்டதையும் பெரும் நூலகங்களும், புத்தகக் கடைகளும், பெட்டி இதழ்க் கடைகளும் இயங்குவதையும் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவில் கல்வி அறிவு 1947-இல் 10 சதவீதம்.  இப்போது பல மடங்கு அதிகரித்துள்ளது.  ஆனாலும் புதிய வாசிப்புப் பழக்கமும் புத்தக வெளியீடும் குறைந்து போயுள்ளதாக வருத்தம் தெரிவிக்கிறார் நூலாசிரியர்.

ADVERTISEMENT

நூல் வாசிப்பைப் பெருக்குவதற்கான வழிமுறைகள், அதற்கு அரசும், கல்விக் கூடங்களும், அரசு, தனியார் நிறுவனங்கள், தங்கும் விடுதிகள் செய்ய வேண்டிய பணிகளைப் பட்டியலிட்டுள்ளார். தமிழைப் பேசுவதற்கும் வாசிப்பதற்குமான ஆள்கள் குறைந்துவிட்டால் வாசிப்போரே இருக்கமாட்டார்கள் என தன் ஆதங்கத்தையும் பட்டியலிட்டுள்ளார்.

படித்தவர்கள் அதிகம் கொண்ட நாடுகள் யாருக்கும் அடிமையாவதில்லை.  எனவே நூல்களை வாசிக்கும் பழக்கத்தை அதிகரிக்கச் செய்ய வேண்டும். தமிழகத்தில் நடைபெற்ற வாசிக்க வாங்க இயக்கம் தொடர்பாக வெளியான நாளிதழ் செய்திகளையும் என்னென்ன பொருள்கள் விவாதிக்கப்பட்டன என்பது தொடர்பாகவும் கூடுதல் செய்திகள் இடம் பெற்றது சிறப்புச் சேர்க்கிறது.  விழிப்புணர்வை ஏற்படுத்தும் நூல். 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT