நூல் அரங்கம்

நானும் வந்தேன் ஒரு சித்தன்

5th Sep 2022 12:59 PM

ADVERTISEMENT

நானும் வந்தேன் ஒரு சித்தன் - இரவீந்திர பாரதி;  பக்.110; ரூ.110, மாரிராஜம் வெளியீடு,  அரூர்- 636903, (தருமபுரி மாவட்டம்); 94421 58086.

பாரதியார் மறைந்து நூற்றாண்டு ஆகியும் அவர் மீது தவறான குற்றச்சாட்டுகளும், அவதூறுகளும் இன்றும் தொடர்கின்றன. பாரதியை உலகமே கொண்டாடி வரும் நிலையில் அவர் பிறந்த தமிழ் மண்ணில் ஒரு சிலர் அவதூறுகளைப் பரப்பி வருகின்றனர். 

புதிதாக வாசிப்பில் நுழையும் இளைய தலைமுறையினர் இந்த அவதூறுகளை உண்மை என நம்பி மயங்கிவிட வாய்ப்பிருக்கிறது. எனவே பாரதியின் மீதான நாணயமற்ற, நேர்மையற்ற குற்றச்சாட்டுகள் குறித்தும், இவை எவ்வாறு உண்மைக்கு மாறாக திரிக்கப்படுகின்றன என்பது குறித்தும் "நானும் வந்தேன் ஒரு சித்தன்' நூல் மூலமாக தனது கருத்துகளை அழுத்தமாக பதிவு செய்கிறார் நூலாசிரியர் இரவீந்திரபாரதி.

பாரதி பக்திக் கவியா?, பாரதியின் தத்துவப் பார்வை, பெண்மை வாழ்க, குயில்பாட்டு- ஒரு புதிய பார்வை ஆகியவை உள்ளிட்ட ஒன்பது அத்தியாயங்களில் பாரதியார் சமூகத்துக்கு ஆற்றிய பங்களிப்பு,  தமிழ் வளர்ச்சிக்காக பாடுபட்டது,  சாதி ஒழிப்புக்காக தனது எழுத்துகளை துணையாக கொண்டு போராடியது என பல்வேறு தகவல்களை உரிய மேற்கோள்கள், கவிதைகள், நிகழ்வுகள் மூலம் சொல்லப்பட்டிருப்பது வாசகர்களை நிச்சயம் ஈர்க்கும்.

ADVERTISEMENT

பாரதியைப் பற்றி எண்ணற்ற புத்தகங்கள் இருக்கும் நிலையில், புதிய முயற்சியில் இந்த நூல் இருக்கிறது. பாரதியை நேசிப்பவர்கள் மட்டுமின்றி, தமிழ்  ஆர்வலர்கள் அவசியம் படித்து அறிய வேண்டிய செய்திகள் நிறைய உள்ளன.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT