நூல் அரங்கம்

தமிழர் பண்பாடு  (குதர்க்கமான கேள்விகளும் தெளிவான பதில்களும்)

31st Oct 2022 02:56 PM

ADVERTISEMENT

தமிழர் பண்பாடு  (குதர்க்கமான கேள்விகளும் தெளிவான பதில்களும்)- பா.இந்துவன்; பக். 278; ரூ.320;  சுவாசம் பப்ளிகேஷன்ஸ் (பி.) லிமிடெட்., சென்னை-127; 81480 66645.

தமிழர்களின் பண்பாட்டு அடிப்படைகளை, பழந்தமிழர் நூல்கள் மூலமே நிறுவியுள்ளனர் என்று நூலாசிரியர் கூறுகிறார்.  சங்க காலத்தில் தமிழ்நாடு இருந்ததா, தமிழர் பண்பாட்டில் இதிகாசங்களின் பங்கு என்ன, தமிழர்களின் திருமண முறையில் தாலிக்கு இடம் உண்டா, சங்க காலத்தில் சம்ஸ்கிருதம் இருந்ததா போன்ற 28  கேள்விகளை எடுத்துக்கொண்டு, அவற்றுக்கு விரிவாக, ஆதாரபூர்வமான பதில்களை எழுதி இருக்கிறார் நூலாசிரியர்.  இவை தவிர, தமிழ் கலாசாரத்தில் ஆன்மிகம், கடவுள் வழிபாடு, திருவிழாக்கள், விளையாட்டுகள், சைவம்- வைணவத்தில் தமிழின் பங்கு, தமிழக நிலப்பரப்பில் பௌத்தமும், சமணமும் இருந்ததா?, ராமாயணம்- மகாபாரதத்துக்கும் தமிழகத்துக்கும் இடையேயான தொடர்பு என்பதற்கான விளக்கங்களும் உண்டு.

தமிழர் பண்பாடு குறித்து எண்ணற்ற நூல்கள் வெளியாகியுள்ளன. ஆனால்,  உலகமே போற்றும் தமிழ் கலாசாரத்தில், சந்தேகங்கள், பொய்ப் பிரசாரங்கள் செய்வோரும் உண்டு.  இவர்களுக்கெல்லாம் விடையளிக்கும் வகையில் இந்த நூல் இருக்கும் என்பதே உண்மை.

தமிழ் ஆர்வலர்களுக்கு மட்டுமல்ல; கலை, இலக்கியம், ஆன்மிகம், வரலாறு... என்று பல்நோக்கு சிந்தனையில் உருப்பெற்றுள்ளது இந்த நூல். படிக்க மட்டுமல்ல; பாதுகாத்து வைக்கப்பட வேண்டிய பொக்கிஷ நூல். 

ADVERTISEMENT

தமிழில் ஆராய்ச்சி செய்வோர் வாசிக்க வேண்டிய நூல்.

ADVERTISEMENT
ADVERTISEMENT