நூல் அரங்கம்

தமிழகம் (சமூகப் பொருளாதாரக் கட்டமைப்பு மாற்றமும், சுற்றுச்சூழலும்)

3rd Oct 2022 11:59 AM

ADVERTISEMENT

தமிழகம் (சமூகப் பொருளாதாரக் கட்டமைப்பு மாற்றமும், சுற்றுச்சூழலும்) - ப.கு.ராஜன்; பக். 62; ரூ.70; நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., சென்னை- 50; 044 26251968.

நாட்டில் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு அதிகரித்துவரும் நிலையில், அதற்கான அவசியம் குறித்து இந்த நூலில் நூலாசிரியர் விரிவாக விளக்கியுள்ளார்.  புவி வெப்பமயமாதல், பேரழிவு போன்ற பிரச்னைகள் இருக்கும் நிலையில்,  சுற்றுப்புறச் சீர்கேடுகளால் நிலவும் ஆபத்துகள் குறித்து தெளிவாக விவரித்துள்ளார்.

வேளாண்மை, தொழிற்சாலை உற்பத்தி, சேவைத் துறை ஆகிய மூன்று அரங்கங்களிலும் முன்னணியாக இருந்தாலும், சுற்றுச்சுழல் ஆபத்துகளில் பின்தங்கியே இருக்கிறோம் என்பதையும் நூலாசிரியர் தெளிவாகச் சுட்டிக் காட்டியுள்ளதோடு,  அரசுகள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் எழுதியுள்ளார்.

நீர், நிலப் பாதுகாப்பின் அம்சங்கள், கனிமம், தொழில், விவசாயம்,  சேவை என்று பல்வேறு துறைகளில் பாதுகாப்பையும்,  ஏற்றத் தாழ்வுகளையும் அலசியுள்ளார் நூலாசிரியர்.

ADVERTISEMENT

13 தலைப்புகளில் சுருக்கமாக எழுதியிருந்தாலும், வரிக்கு வரி பல்வேறு கருத்துகளை உணர்த்துவதாகவே இந்த நூல் உள்ளது. நூலின் பிற்பகுதியில் பல அரிய தகவல்கள் புள்ளிவிவரத்துடன் அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளது சிறப்பு.

சமூக, பொருளாதரம், அறிவியல், அரசியல், சுற்றுச்சூழல் என  பல்வேறு துறைகளைச் சேர்ந்தோர் மட்டுமின்றி, சாமானியர்களும் படித்து சுற்றுச்சூழல் பாதுகாப்பை பின்பற்ற வேண்டிய நூல் இது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT