நூல் அரங்கம்

பாரதியின் நெஞ்சை அள்ளும் சிலம்பு

28th Nov 2022 01:58 PM

ADVERTISEMENT

பாரதியின் நெஞ்சை அள்ளும் சிலம்பு - புலவர் இ.ப.நடராசன்; பக்.  175; ரூ.175; மணிவாசகர் பதிப்பகம், சென்னை-104; 044-2536 1039.

மகாகவி பாரதியார் குறித்து எண்ணற்ற நூல்கள் வந்துகொண்டிருந்தாலும்,  சிலப்பதிகாரத்தையும் பாரதியார் பாடல்களையும் அணுஅணுவாகப் பயின்று நோக்கி நூலாசிரியர் எழுதியுள்ள இந்த நூல் சிறப்புடையது.   

கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் இளங்கோ அடிகளால் எழுதப்பட்ட சிலப்பதிகாரம் பாரதியாரை ஈர்த்தது குறித்தும், அதனை 'நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம்' என்றும் 'தமிழன்னையின் மணிஆரம்' என்றும் பாரதியார் வர்ணித்தது தமிழின் பெருமையைப் பறைசாற்றுகிறது.

பாரதியின் நெஞ்சை அள்ளிய சிலம்பு நூலில் 8 கட்டுரைகள் உள்ளன.  மதுரையில் கண்ணகியின் வீரத்தை பாரதியார் சிறப்பான முறையில் எழுதியுள்ளதைப் பார்க்கும்போது, ஒரு சுருக்க வடிவிலான, சிறப்பான முறையிலான ஒரு நூலை வாசித்த திருப்தி மனதில் எழுகிறது.

ADVERTISEMENT

முதல் 4 கட்டுரைகள் சிலம்பின் எல்லா பகுதிகளும் பாயிரம் தொடங்கி முப்பது காதைகளும் பாரதியின் நெஞ்சை அள்ளியது குறித்தும்,  ஐந்தாவது கட்டுரை பாரதியின் 'ஜகத்தினை அழித்திடுவோம்' என்ற பாடலின் சிறப்பு குறித்தும் விளக்கியுள்ளன. 

பாரதியார், தமிழை அறிய வேண்டியோர் அவசியம் வாசிக்க வேண்டிய அற்புத நூல் இது.

ADVERTISEMENT
ADVERTISEMENT