நூல் அரங்கம்

மாயத்தீவினிலே (நாவல்)

28th Nov 2022 02:50 PM

ADVERTISEMENT

மாயத்தீவினிலே (நாவல்) - முனைவர் ரா. மனோகரன்; பக். 456; ரூ.500. காவ்யா பதிப்பகம், சென்னை-24; 044-2372 6882.

மாயத்தீவினிலே நாவல் பழங்குடியினர் பண்பாட்டை விளக்கும் ஆவணமாகவும், பழந்தமிழ் இனத்தின் பெருமையைப் பறைசாற்றும் கருத்தியலாகவும் அமைந்துள்ளது. இது கற்பனைத் தீவுகளைப் பற்றிய கதையாக தோன்றினாலும், இது ஒரு பழங்குடித் தீவில் நிகழ்ந்த உண்மைக் கதையை மையமாகக் கொண்டுள்ளது. 

கதையின் நடுவே பழங்குடியினரைப் பற்றிய விவரங்கள் தரும்போது குமரிக் கண்டத்திலிருந்து விலகிச் சென்ற நிலப்பரப்புகள்,  இனங்கள்,  மொழிகள், வாழ்வியல் முறைகள். வழிபாட்டு முறைகள், சடங்கு முறைகள் போன்றவற்றையும் காட்டியுள்ளார் நூலாசிரியர். 

தமிழ் மொழி, தமிழினம், குமரிக் கண்டத்தின் கீழ் இருந்த 49 நாடுகள் பற்றி காடன் என்ற கதாபாத்திரம் கூறுவது போல் ஆசிரியர் வடிவமைத்துள்ளார். கச்சி முதல் மருதன், காடன், கொம்பன், தொந்தி, குப்பன் போன்ற கதாபாத்திரங்கள் நாவல் முழுக்க வியாபித்துள்ளார்கள். இவர்களுக்கு நடுவே நிழலாடும் கதைதான் மாயத்தீவினிலே!

ADVERTISEMENT

இன்றும் இயற்கையோடு வாழும் பழங்குடியினரின் வாழ்க்கை முறைகள் நூலைப் படிக்கும்போது வியப்புறவே செய்கின்றன.

நாவலாக இல்லாமல், பழங்குடியினரின் நிலையையும் அறிய உதவும் நூல் இது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT