நூல் அரங்கம்

முதியோர் நலம் - முதுமையை முழுமையாக அனுபவிக்க...;

21st Nov 2022 01:55 PM

ADVERTISEMENT

முதியோர் நலம் - முதுமையை முழுமையாக அனுபவிக்க...; பத்மஸ்ரீ டாக்டர் வி.எஸ்.நடராஜன்; பக். 255; ரூ. 250; டாக்டர் வி.எஸ்.நடராஜன் முதியோர் நல அறக்கட்டளை; சென்னை-10.

முதியோர் சந்திக்கும் குடும்பப் பிரச்னைகள் நாள்தோறும் அதிகரித்து வருகின்றன. முதுமையில் ஏற்படும் நோய்கள் மட்டுமின்றி, அவர்களுக்கு ஏற்படும் பிரச்னைகளையும் தெரிந்து கொண்டு, அவற்றைத் தடுத்து நலமாக வாழ உதவுவதும், முதியோர் சந்திக்கும் பிரச்னைகளுக்குத் தீர்வு காணவும் பிறந்ததுதான் முதியோர் நலம் எனும் இந்த நூல் என நூல் ஆசிரியர் குறிப்பிடுகிறார்.

முதுமை ஏற்படக் காரணங்கள், முதுமை எப்போது ஆரம்பிக்கிறது?, முதுமையின் முதல் அறிகுறி என்ன?,  முதுமையில் மறைந்திருக்கும் நோய்கள், குறைவாகச் சாப்பிட்டு நீண்ட காலம் வாழலாம், இறுதி மாதவிடாய்,  பெண்களுக்கு முதுமையில் ஏற்படும் நீர்க்கசிவு, உடல் தானம், இறப்பும்-ஏற்பும் என மொத்தம் 37 தலைப்புகளில் பயனுள்ள முதியோர் நலத் தகவல்கள் இந்த நூலில் விரிவாக இடம் பெற்றுள்ளன.

மரணம் குறித்து அறியாமலேயே மரணம் அடைவோர் பாக்கியசாலிகள். 'காலா உனை நான் சிறு புல்லென மதிக்கிறேன், எந்தன் காலருகே வாடா! சற்றே உனை மிதிக்கிறேன்' என்று மகாகவி பாரதியார் பாடினார். அதை அடிக்கடி நினைவில் வைத்துக் கொண்டால் மரண பயம் வராது என்கிறார் நூல் ஆசிரியர் டாக்டர் வி.எஸ்.நடராஜன்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT