நூல் அரங்கம்

கால் பந்தாட்டம் ஒரு நகைச்சுவைக் கண்ணோட்டம்

DIN

கால் பந்தாட்டம் ஒரு நகைச்சுவைக் கண்ணோட்டம் - ப.குணசேகர்;  பக். 192; ரூ.50; பண்புப் பதிப்பகம், கோவை-641 006; 9994107302

கி.மு. 206 முதல் 220 வரையில் கூஜூ என்ற பெயரில் கால்பந்தாட்டத்தை அரசக் குடும்பத்தைச் சேர்ந்தோரும், ராணுவத்தினரும் ஆடி வந்தது முதல் கால்பந்து கோமாரி என்ற பெயரில் 13-ஆம் நூற்றாண்டில் தரம் உயர்ந்த விளையாட்டு, உலகம் முழுவதும் பரவியது எப்படி என்று கதையாகச் சொல்லாமல், சில வரிகளிலேயே நூலாசிரியர் குறிப்பிட்டுள்ளார்.

உலகக் கோப்பை, சாதித்தவர்களும், சாதிக்கப்பிறந்தவர்களும், ஒரு துணுக்குத் தோரணம் என்று 4 பிரிவுகளாக நூலில் தகவல்கள் அளவில்லாமல் இடம்பெற்றுள்ளன. கால்பந்தாட்ட வீரர்கள், சாதனையாளர்கள் குறித்த முழு விவரங்களும் சுருக்கமாக இடம்பெற்றுள்ளன.  அவர்கள் குறித்த வாழ்க்கையில் நடைபெற்ற சுவாரசியமான தகவல்களும் சில வரிகளில் தரப்பட்டுள்ளன.

உலகக் கோப்பை போட்டிகள் குறித்த விவரங்களும்,  எதிரெதிர் அணி வீரர்களுக்கு இடையே நடைபெற்ற பேச்சுகள் குறித்தும் நகைச்சுவையாகத் தகவல்கள் இடம்பெற்றுள்ளன. கால்பந்தாட்டம் நடைபெறும் நாடுகளின் சிறப்புகள் இந்த நூலில் இடம்பெற்றுள்ளன.

கால்பந்தாட்டத்தில் சாதனை படைத்தவர்கள் யார் என்பதை அறிய முடிகிறது.  விளையாட்டு வீரர்கள் அவசியம் படிக்க வேண்டிய நூல் இது. முக்கியமாக, கால்பந்தாட்டத் துறையில் சாதிக்க விரும்புவோர் படித்து பாதுகாக்க வேண்டிய நூல்.

பல நூல்களில் சாதனையாளர்கள் பற்றி தெரிந்துகொள்ள வேண்டியவை இந்த ஒரே நூலில் அடங்கியுள்ளது சிறப்பானது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இளம் வாக்காளா்களுக்கு எல்.முருகன் பாராட்டு

இந்தியா கூட்டணி மகத்தான வெற்றிபெறும்: ஈவிகேஎஸ்.இளங்கோவன்

காவல் துறை அதிகாரியுடன் மோதல்: திமுக நிா்வாகியிடம் விசாரணை

வாக்களித்த 104 வயது விவசாயி

நாட்டின் இரண்டாவது சுதந்திரப் போராட்டம்: மக்களவைத் தோ்தல் குறித்து மம்தா

SCROLL FOR NEXT