நூல் அரங்கம்

அதோ அந்தப் பள்ளிக்கூடந்தான்

20th Jun 2022 01:42 PM

ADVERTISEMENT

அதோ அந்தப் பள்ளிக்கூடந்தான் - மா. சுரேஷ்; பக்.90; ரூ.100; அறம் பதிப்பகம், ஆரணி, திருவண்ணாமலை (மா.)-632316; 9150724997.

பன்னிரண்டு கட்டுரைகளின் தொகுப்பு இந்த நூல். 'சமூக நிகழ்வுகளை' அக்கிரமங்களை கண்டும் காணாததுபோல நகர்ந்து கொண்டிருக்கும் மனிதக் கூட்டத்தில் அவற்றை எழுத்தாகப் பதியவைப்பது அரிதாகிக் கொண்டிருக்கின்றது. அதற்கு ஒரு சாமர்த்தியமும் தைரியமும் வேண்டும். 'இதோ ஒரு தைரியசாலி' என்று இந்நூலாசிரியருக்குப் புகழ்மாலை சூட்டி அணிந்துரை வழங்கியிருக்கும்  சி.ஜோஷ்வாவின் கூற்றை வழிமொழிந்தே ஆகவேண்டும்.  

'திருத்திக் காட்டவா... தீர்த்துக் கட்டவா' என்கிற கட்டுரையைத் தவிர இத்தொகுப்பில் உள்ள, தூக்கம் என் கண்களை, மன்னிப்பும் ஒரு மருந்துதான், இதயத்தைக் கழுவலாமே, இனி அம்மா உணவகத்தில், கந்து வட்டியும் கேன்சர் கட்டியும், தர்மத்தை நிலைநாட்ட, ஆகம விதியா... ஆன்மிக சதியா? முதலிய கட்டுரைகள் அனைத்தும் 'சமரசம்' இதழில் வெளியானவை. "இதயத்தைக் கழுவலாமே' கட்டுரை அதி அற்புதம் என்று சொல்லலாம். 

குழந்தைகளின் தன்மை, பள்ளிக்கூடம், குழந்தைகளுக்கான இலவசக் கல்வி உரிமைச் சட்டம், ஆசிரியர் சமூகம், மாணவர்களின் வறுமை, சத்துணவுத் திட்டம் எனச் சுற்றிச் சுழல்கிறது. தான் வாழும் சமூகத்தின் மீதுள்ள அழுக்கையும், தன்னைச் சுற்றியுள்ள மனிதர்களின் மன அழுக்கையும் நீக்கும் சிறு முயற்சியின் வெளிப்பாடுதான் இந்நூல்.
 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT