நூல் அரங்கம்

அள்ள அள்ளப் பணம் - 7 தங்கம் (தங்கம் - வெள்ளி - பிட்காயின்)

20th Jun 2022 02:39 PM

ADVERTISEMENT

அள்ள அள்ளப் பணம் - 7 தங்கம் (தங்கம் - வெள்ளி - பிட்காயின்) -  சோம.வள்ளியப்பன்; பக்: 200; ரூ.225; கிழக்கு பதிப்பகம்,  சென்னை-14; 044-4200-9603.

தங்கம் என்ற 'தாதா'  முதல்  23 அத்தியாயங்களைக் கொண்டதாக நூல் விளங்குகிறது.  ஒரு சர்வதேச புள்ளியன்தான்  "தங்கம்'.  பங்குச் சந்தை உலகின் அத்தனை நுணுக்கங்கள், மியூச்சுவல் பண்ட் என்றால் என்ன?  அதில் எவ்வாறு முதலீடு செய்வது  உள்ளிட்டவை குறித்து  எளிமையாகக் கற்பித்தவரின் மற்றொரு நூல்தான் "தங்கம்' குறித்த இது.

தங்கம், வெள்ளி, கிரிப்டோகரன்சி ஆகிய மூன்று குறித்தும் மிகத் தெளிவான, நல்ல புரிதலுடன்  விரிவான அறிமுகத்தை நூல் ஆசிரியர் பதிவு செய்துள்ளார்.  

தங்கத்தில் முதலீடு செய்வது எப்படி  பயனுள்ளதாக இருக்கும்? நகைகள், தங்கக் காசுகள், இ-கோல்ட், கோல்ட் பாண்டுகள், கோல்ட் இ.டி.எஃப்கள், கமாடிட்டி கோல்ட், கோல்ட் மானிட்டைசேஷன் ஸ்கீம் என்றால் என்ன? எதில் எவ்வளவு முதலீடு செய்வது என்பது குறித்தும் உள்ளது.  தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கங்கள் ஏன்,  விலை நிர்ணயம் எப்படி?  ஏன் மாறிக்கொண்டே இருக்கிறது? என்பதற்கான காரணங்களை அட்டவணை மூலம் நூலாசிரியர் விளக்கியுள்ளார்.

ADVERTISEMENT

வெள்ளியிலும், பிட்காயினிலும் முதலீடு செய்வது உசிதமாக இருக்குமா என்பதற்கும் விளக்கம் உள்ளது. கிரிப்டோகரன்சி குறித்த சந்தேகங்களுக்கு அழகாக, எளிதாக விளக்கமளித்துள்ளார். 

பின் இணைப்பு மூலம் பல்வேறு தகவல்களை அள்ளித் தந்துள்ளார்.  வணிகம், முதலீடு, பொருளாதாரம் ஆகியவற்றில் ஆர்வமுள்ள, ஈடுபாடுள்ள, விருப்பமுள்ள அனைவருக்கும் இந்த நூல் பயனுள்ள ஆலோசனைக் கையேடு மட்டுமல்ல; ஒரு வரப்பிரசாதமும் கூட!
 

ADVERTISEMENT
ADVERTISEMENT