நூல் அரங்கம்

ஒருமையைத் தேடி...

20th Jun 2022 02:48 PM

ADVERTISEMENT

ஒருமையைத் தேடி... - மூஸா ராஜா; பக்.320; ரூ.350; புதுப்புனல், சென்னை-5;  9884427997.

பகவத் கீதை,  திருக்குர்-ஆனில் உள்ள ஒற்றுமைகளை ஆராய்ந்து, தனது வாழ்க்கை, மத்திய அரசில் பணிபுரிந்தஅனுபவத்தின் பின்னணியில்  நூலாசிரியர்  விவரித்துள்ளார்.

ஹிந்துக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையே தேவைப்படுவது சகிப்புத்தன்மை அல்ல; மத நூல்களின் கருத்துகள், வழிபாடுகளைப் புரிந்து பாராட்டவும் மதிக்கவும் வேண்டும்.  இதனால் புரிந்துணர்வை ஏற்படுத்த முடியும் என்கிற நம்பிக்கையை விதைத்துள்ளார். 

மனிதனின் மனதில் இறைவன் வசிப்பதாக பகவத் கீதை கூறுகிறது. கழுத்து பெருநரம்பைவிட மிக அருகில் இறைவன் இருப்பதாக திருக்குர்-ஆன் கூறுகிறது. இறைவன் இவ்வளவு நெருக்கமாக இருந்தும் மிக அரிதாகவே இறைவனை மனிதன் உணருவதற்கு  மாயை காரணமாகிறது.  இது தானாக உருவான ஒன்றா அல்லது இறைவனால் உருவாக்கப்பட்ட ஒன்றா என்கிற கேள்வியை நூலாசிரியர் எழுப்பியதோடு மட்டுமல்லாது,  சங்கரர், ராமகிருஷ்ண பரமஹம்சர், இஸ்லாமிய தீர்க்கதரிசி இபின் அல் அரபி ஆகியோரின் விளக்கங்களையும் பதிவு செய்துள்ளார். 

ADVERTISEMENT

இறைவன் இடைவிடாமல் செயலாற்றுகிறார்; மூவுலகங்களிலும் இறைவனால் உருவாக்கப்படாத ஒன்றுமே இல்லை என கீதை எடுத்தியம்பும் அதே கருத்தை, இறைவன் புவியின் மேலும் கடலின் உள்ளும் உள்ள எல்லாவற்றையும் அறிவார்; இறைவன் அறியாமல் ஓர் இலைகூட கீழே விழாது என திருக்குர்-ஆனும் கூறுகிறது. இதைப்போல கீதை ஸ்லோகங்கள், குர்-ஆனின் வசனங்கள் நுட்பமாக ஒரே மையத்தில் நூலில் இணைக்கப்பட்டுள்ளன. 

ADVERTISEMENT
ADVERTISEMENT