நூல் அரங்கம்

பிரஞ்சியர் காலப் புதுச்சேரி: மண்ணும் மக்களும் (1674-1815)

20th Jun 2022 02:50 PM

ADVERTISEMENT

பிரஞ்சியர் காலப் புதுச்சேரி: மண்ணும் மக்களும் (1674-1815) - எம்.பி.இராமன்; பக்.392; ரூ.390; காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில்- 629001; 04652-278525.

கி.பி. 1674 முதல் 1815 வரையிலான புதுச்சேரியின் வரலாறு குறித்தும், அங்கு வாழ்ந்த மக்களின் சமூக வாழ்க்கை குறித்தும் ஆய்வு நோக்கில் இந்நூல் பதிவு 
செய்துள்ளது.

ஆய்வு நோக்கில் எழுதப்பட்டிருப்பினும் புதுச்சேரி நகரமாக உருப்பெற்றது; பிரெஞ்ச் பேரரசின் எழுச்சி - தளர்ச்சி - வீழ்ச்சி; வாழ்க்கை நிலை; சமூக அமைப்பு; சாதியம்; 
கிறிஸ்தவத்தின் ஆதிக்கம் ஆகியவற்றை அதனதன் பின்னணியுடன், விறுவிறுப்பான நாவலுக்குரிய சுவாரஸ்யத்துடன் எளியமுறையில் இந்நூல்  எடுத்தியம்புகிறது.

ஆங்கிலேயர்கள் அவ்வப்போது புதுச்சேரியைக் கைப்பற்றுவதும் திரும்பவும் பிரெஞ்சுகாரர்களிடம் ஒப்படைப்பதும் வழக்கம். போர்களின் முடிவில் கட்டுமானங்களுக்கு சேதம் விளைவிக்காமல் கொள்ளையிடுவதே ஆங்கிலேயரின் வழக்கம். ஆனால், இதற்கு நேர்மாறாக ஒட்டுமொத்த நகரத்தையும் இடிக்க 1761-ஆம் ஆண்டு  ஜனவரி 24-ஆம் நாள் ஆங்கிலேய அரசு உத்தரவிட்டதன் பின்னணி உள்பட பல்வேறு வரலாறுகளை காரண காரியத்துடன் நூலாசிரியர் விவரிக்கிறார். 

ADVERTISEMENT

பிரெஞ்ச் காலனியாதிக்க வரலாற்றில் பெரிதும் விமர்சனத்துக்குள்ளான வேதபுரீசுவரர் கோயில் இடிப்புச் சம்பவத்தில், ஐரோப்பிய பாதிரிமார்களின் வெறுப்பு, சூழ்ச்சி, பிறமதங்
களின் மீதான காழ்ப்புணர்வு வெளிப்படுகிறது. 

பொருத்தமான இடங்களில் ஆங்காங்கே புகைப்படங்களை இணைத்திருப்பது, நூலின் பிற்பகுதியில் வண்ணப் புகைப்படங்களை தொகுத்திருப்பதும்  சிறப்பு. புதுச்சேரியின் வரலாற்றை பதிவு செய்துள்ள நூல்களில் இந்த நூல் குறிப்பிடத்தக்கது. 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT