நூல் அரங்கம்

பேராசிரியர் மோரியுடன் நான் செலவிட்ட செவ்வாய்க்கிழமைகள்

DIN

பேராசிரியர் மோரியுடன் நான் செலவிட்ட செவ்வாய்க்கிழமைகள் - மிட்ச் ஆல்பம், தமிழில் : நாகலட்சுமி சண்முகம்; பக். 242; ரூ. 299; மஞ்சுள் பப்ளிஷிங் ஹவுஸ், சி 16, செக்டார் 3, நொய்டா, உத்தர பிரதேசம் - 201301
 ட்யூஸ்டேஸ் வித் மோரி - என்ற ஆங்கில நூலின் மொழிபெயர்ப்பு இது.
 தன்னுடைய எழுபதாவது வயதுகளில் "லூகெரிக்' என்ற இயக்க நரம்பு நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறார் கல்லூரிப் பேராசிரியர் மோரி. மரணம் நிச்சயம், நேரம் மிகவும் குறைவு என்பதுதான் யதார்த்தம்.
 கல்லூரிப் படிப்பு முடிந்த பிறகு, அடிக்கடி சந்திப்பதாகத் தாம் கொடுத்திருந்த வாக்குறுதியை நிறைவேற்றாத மாணவர் - நூலாசிரியர் மிட்ச் ஆல்பம், பத்திரிகையாளர் - பதினாறு ஆண்டுகளுக்குப் பிறகு தன்னுடைய பேராசிரியரைச் சந்திக்கிறார், மோரியின் கடைசி தருணத்தில்.
 தொடர்ந்து, செவ்வாய்க்கிழமை தோறும் இவர்களுடைய சந்திப்பு நடைபெறுகிறது. மோரியின் மறைவு வரைக்கும் 14 வாரங்கள் நடைபெறும் இந்தச் சந்திப்புகளில் பேராசிரியரும் தானும் உரையாடியவற்றை, ஆசிரியருக்கு அளித்த வாக்குறுதிப்படியே, பிரமாதமான நூலாகப் பதிவு செய்திருக்கிறார் மிட்ச் ஆல்பம்.
 மரணத்தை எதிர்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை என்கிற நிலைமையில் ஒரு வருடனான பொதுவான உரையாடல்கள் மரணத்தைத் தவிர்த்து, பிறவற்றைப் பற்றியதாகத்தான் வழக்கமாக இருக்கின்றன. ஆனால், இந்த நூலில் மரணத்தை முன்வைத்து உரையாடல்கள் நடைபெறுகின்றன.
 உலகம், கழிவிரக்கம், பின் வருத்தம், மரணம், குடும்பம், உணர்ச்சிகள், மூப்பு, பணம், அன்பு, திருமணம், கலாசாரம், மன்னித்தல், கச்சிதமான நாள் என பல்வேறு விஷயங்களைப் பற்றி குருவும் சிஷ்யனுமாக அலசுகின்றனர்.
 இறுதியான தொலைக்காட்சி பேட்டியொன்றில் மோரி சொல்கிறார்: "ஒருவரை யொருவர் நேசியுங்கள், இல்லையேல் அழிந்துபோவீர்கள்'.
 தமிழிலேயே இத்தகைய நூல்கள் எழுதப்பட வேண்டியது எவ்வளவு அவசியம் என்பதைப் புரிய வைக்கிறது இந்நூல்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

குடும்பத்துடன் வாக்களித்த சூர்யா; ஜோதிகா பங்கேற்காதது ஏன்?

தேர்தல் பணிக்குச் சென்றபோது விபத்து: ஆசிரியை கணவர் பலி!

கடக் நகராட்சி துணைத்தலைவர் குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் கொடூரக் கொலை

தமிழகத்தில் 1 மணி நிலவரம்: 40.05 % வாக்குகள் பதிவு!

SCROLL FOR NEXT