நூல் அரங்கம்

தமிழில் மொழிபெயர்ப்பு இலக்கியம்

DIN

தமிழில் மொழிபெயர்ப்பு இலக்கியம்-அ.பிச்சை, பக்.478, ரூ.480, நியூஸ்மேன் பப்ளிகேஷன்ஸ், மதுரை-20, )0452 4396667.
 இன்றைய காலத்தில் அறிவியல் செயல்பாடுகள் முதல் அன்றாடப் பணிகள் வரை அவசியத் தேவையாக மாறிவிட்ட மொழிபெயர்ப்புத் திறனின் அனைத்து கோட்பாடுகள், படிநிலைகளை விரிவாக விளக்குகிறது இந்நூல்.
 தமிழில் மொழிபெயர்ப்பு என்பது தொல்காப்பியர் காலம் தொடங்கி நிகழ்ந்து வரும் இலக்கியச் செயல்பாடு. தொல்காப்பியத்தில் வழிவகை நூல்களில் ஒன்றாக மொழிபெயர்ப்பு நூல் குறிப்பிடப்பட்டுள்ளதாக நூலாசிரியர் கூறுவதன் மூலம் மொழி பெயர்ப்புக் கலையின் தொன்மை, அருமையை உணரமுடிகிறது.
 மொழிபெயர்ப்பாளருக்கு இரு மொழிகள் குறித்த ஆழங்காற்பட்ட இலக்கண அறிவு, சொல்லாட்சித்திறன் மட்டுமல்ல, மூல நூலின் கருத்து, வடிவம் சிதைவுறாமல் சுவை குன்றாமல் தர கலை உள்ளமும் தேவை.
 மூல நூல் ஆசிரியரின் எழுத்து, நடை, எண்ணத்தில் நுழைந்து வரக் கூடிய திறமையும் நிரம்ப வேண்டும் என்பன போன்ற வழிகாட்டுதல்கள் சிந்தையில் கொள்ளத் தக்கவை. வருவாயை மட்டுமே குறிவைத்து கணினி வழியில் அவசர கதியில் மேற்கொள்ளப்படும் செறிவற்ற மொழிபெயர்ப்புகள் தவிர்க்கப்பட வேண்டும் என்றும் இந்நூல் அறிவுறுத்துகிறது.
 மொழிபெயர்ப்பு குறித்து ரவீந்திரநாத் தாகூர் முதல் இன்றைய படைப்பாளுமைகள் வரையிலான பார்வைகள் அழகாக பதிவு செய்யப்பட்டுள்ளன.
 கவிதை, கதை, சிறுகதை, புனைவு உரைநடை, கட்டுரை, இலக்கியம் என அனைத்து வகை நூல்களையும் மொழிபெயர்க்கும்போது கைக்கொள்ள வேண்டிய நுணுக்கங்கள் கவனிக்க வைக்கின்றன.
 உலக மொழிகளிலிருந்து தமிழில் வெளியான பிரபலமான படைப்புகளும் மிகச்சுருக்கமாக தரப்பட்டிருப்பது வெகுசிறப்பு. இளம் தலைமுறையினர் உள்ளிட்ட அனைவருக்கும் பயன் தரக்கூடிய அற்புதமான நூல்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ. 81,100 சம்பளத்தில் சுருக்கெழுத்தர் வேலை வேண்டுமா?

உரத் தொழிற்சாலையை அகற்றக் கோரி போராட்டம்! முன்னாள் அமைச்சர் உள்பட ஏராளமானோர் கைது

'மெட்டி ஒலி' இயக்குநரின் புதிய தொடர் அறிவிப்பு!

திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்!

அண்ணாநகருக்கு விமோசனம்: வரவிருக்கிறது வாகன நிறுத்துமிடம்!

SCROLL FOR NEXT