நூல் அரங்கம்

உண்மை நின்றிட வேண்டும்

DIN

உண்மை நின்றிட வேண்டும்- கிருங்கை சேதுபதி; பக். 160 ; ரூ. 150; முல்லை பதிப்பகம், சென்னை- 40; )98403 58301.
 எழுத்தாளரின் சமுதாய உணர்வே அவரது எழுதுகோல் நுனியில் பிறக்கும் எழுத்துகளாகிறது என்ற கூற்றை மெய்ப்பிப்பதாக இந்த நூலிலுள்ள ஒவ்வொரு கட்டுரையும் இலங்குகிறது. கரோனா தீநுண்மித் தொற்றுக் காலத்தில், கல்லூரிப் பேராசிரியரான கிருங்கை சேதுபதி, தினமணி நாளிதழின் நடுப்பக்கத்தில் எழுதிய 24 கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூல்.
 திருக்குறளில் இவருக்கு இருக்கும் பற்றும் தெளிவும் கட்டுரைகளில் முழுமையாகப் பளிச்சிடுகின்றன. மகாகவி பாரதி, வள்ளலார் மீதான நூலாசிரியரின் பக்திக்கு உதாரணமாக அவர்களைப் பற்றிய கட்டுரைகள் விளங்குகின்றன. இவை அனைத்தையும் விட, மனதை வருடும் சொல்லாட்சியுடன் இனிய சொற்பெருக்காக எழுத்துநடை அமைந்திருப்பது தனிச்சிறப்பு.
 பெண்ணின் சிறப்பு கற்பு என்று சொன்ன வள்ளுவர், ஆணின் சிறப்பு சால்பு என்று கூறியுள்ளதை குறள்வழியே பதிவு செய்துள்ள ஆசிரியரின் நூலறிவு வியக்கச் செய்கிறது.
 "திரு.வி.க. சாயலில் கிருங்கை சேதுபதியின் கட்டுரைகளில் எளிமை, இனிமை, செழுமை, செறிவு ஒளிவீசக் காணலாம்'' என்று மறைந்த தமிழறிஞர் அவ்வை நடராசன் இந்நூலுக்கு அணிந்துரை வழங்கியிருப்பது, வசிஷ்டர் வாயால் விசுவாமித்திரர் பிரம்மரிஷி பட்டம் பெற்றதற்கு சமம்.
 தன்னுயிர் போல மன்னுயிர் யாவையும் கருதிப் பேணும் தண்மையினால்தான் இவ்வையம் தழைக்கிறது என்கிற உண்மையை எடுத்துக் கூறவே இந்நூலை எழுதியிருப்பதாக நூலாசிரியர் முகவுரையில் கூறுவது, நூலின் உள்ளடக்கத்தை வெளிப்படுத்துகிறது. எழுத்துநயம் மேம்பட தமிழ் எழுத்தாளர்கள் படிக்க வேண்டிய நூல் இது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பும்ராவை சரியாக பயன்படுத்தவில்லை; ஸ்டீவ் ஸ்மித் கருத்து!

பெங்களூரு குண்டுவெடிப்பு: முக்கிய குற்றவாளி கைது!

மும்பை விழாவில் அழகு பதுமைகள் அணிவகுப்பு - புகைப்படங்கள்

‘மற்றவர்களுக்கு தொல்லை தருவது காங்கிரஸின் கலாச்சாரம்’: மோடி காட்டம்!

தில்லி பந்துவீச்சு; 100-வது போட்டியில் ரிஷப் பந்த்!

SCROLL FOR NEXT