நூல் அரங்கம்

சத்தியாக்கிரக வாழ்வியல்

5th Dec 2022 11:36 AM

ADVERTISEMENT

சத்தியாக்கிரக வாழ்வியல்- சூ.குழந்தைசாமி; பக். 540; ரூ.680; காந்தி அமைதி நிறுவனம், 332 அம்புஜம்மாள் தெரு, ஆழ்வார்பேட்டை, சென்னை-18.
 மகாத்மா காந்தி குறித்து எண்ணற்ற நூல்கள் வெளியாகியுள்ளபோதிலும், எளிய கலந்துரையாடல், கட்டுரைகள், கதைகளாக எளிதில் பாமரருக்கும் புரியும் வண்ணம் வித்தியாசமான முறையில் நூலாசிரியர் எழுதியுள்ளார்.
 "அண்ணல் காந்தியின் அறவாழ்வு', "காந்திய வாழும் நெறி', "இன்றைய தேவை காந்தி', "யார் இந்த மகரிஷி?' என்ற 4 நூல்களின் தொகுப்புப் படைப்பாக இருந்தாலும், அவரது பிறப்பு முதல் இறப்பு வரையிலான வாழ்க்கை வரலாறு, கொள்கைகள், கோட்பாடுகள், சுதந்திரப் போராட்ட வரலாறு, ஆன்மிகம்.. என பன்முகத்தன்மை ஒருசேர படித்துவிடும் வகையில் ஒரே நூலில் எழுதப்பட்டுள்ளது.
 65 துணைத் தலைப்புகளில் எழுதப்பட்டுள்ள நூலில் காந்திய கோட்பாடுகளை நாம் பின்பற்ற வேண்டிய அவசியத்தை அறியலாம்.
 பணக்காரர்களுக்குக் கிடைக்க வேண்டிய கல்வி, இசை, கலை உள்ளிட்டவை அனைத்தும் பாமரருக்கும் கிடைக்க வேண்டும் என்று காந்தி தனது வாழ்நாள் முழுவதும் போராடியது குறித்து தெளிவான முறையில் நூலாசிரியர் வெளிப்படுத்தியுள்ளார்.
 தியானம், உடலுழைப்பின் அவசியம் குறித்த காந்தியின் விளக்கம் இன்றைய காலகட்டத்தில் அனைவரும் பின்பற்ற வேண்டியவைதான்.
 உலக நாடுகள் பலவும் இன்று காந்தியின் அஹிம்சையை பின்பற்றத் தொடங்கியிருக்கும் வேளையில், அவரை பற்றி இளைய தலைமுறையினர் விரிவாக அறிய வேண்டியது அவசியம். இதிலும், காந்தி குறித்து முழுமையாக, எளிய நடையில் எழுதப்பட்டுள்ள இந்த நூலை படித்து ருசித்தால் தேனாக இனிக்கும். அனைவரும் படித்து இல்லங்களில் பாதுகாக்க வேண்டிய நூல்.

ADVERTISEMENT
ADVERTISEMENT