நூல் அரங்கம்

புதிர்வழி அரண்மனை(கள்)

DIN

புதிர்வழி அரண்மனை(கள்) - ராமசாமி மாரப்பன்;  பக். 760;  ரூ.900;  தி இளங்கோவடிகள் இண்டெலக்சுவல்'ஸ்,  நாமக்கல் - 637 001; 96007 97655.

அயர்லாந்தைச் சேர்ந்த தலைசிறந்த எழுத்தாளர் ஜேம்ஸ் ஜாய்ஸின் படைப்புகளின் தமிழாக்கமே இந்நூல்.  அவரது அறிமுகமும்,  வாழ்க்கை வரலாறும் இணைக்கப்பட்டுள்ளன.  

குறுநாவல்கள், நாவல்கள், கதைகள், நாடகம், கவிதைகள், கடிதங்கள், ஜேம்ஸ் ஜாய்ஸின் படைப்புகள் குறித்த கட்டுரைகளில் ரோமன் கத்தோலிக்கம்,  ஆங்கிலேய ஏகாதிபத்தியம்,  மதம்,  அரசியல் ஆகியவற்றை விமர்சித்தும், முக்கியமாக பெண்களின் பாலியல் சுதந்திரத்தையும் வலியுறுத்தியுள்ளார். 

அவர் தனது வாழ்வின் பெரும்பகுதியை அயர்லாந்துக்கு வெளியில் கழித்தபோதும்,  கதைகளின் களமும், கருப்பொருள்களும்  அவரது சொந்த நகரமான டப்ளினை மையப்படுத்தியே இருக்கின்றன. ஆனாலும் இவரது படைப்புகள் உலகளவில் பரவலாக அறியப்பட்டுள்ளது.

அன்றைய காவியங்களும் இன்றைய நாவல்களும் ஒருவிதத்தில் ஒன்றேதான். காவிய கர்த்தாக்களும், நாவலாசிரியர்களும் ஒரே மாதிரியான இலக்கியவாதிகள்தான் என்பதை இவரது படைப்புகளின் கதாபாத்திரங்கள் வழியே கோடிட்டு காட்டுகிறார். 

கடவுள்களும், கலைஞர்களும் சகலத்துக்கும் விதிவிலக்கானவர்கள். ஏன், எதற்கு என்ற கேள்விகள் கூடாது என்று பகடி செய்வதும், ஆயிரம் வரிகளில் சொல்வதை தனித்த ஒரு சொல்லில் விஷயப்படுத்துவது உள்ளிட்டவைகள்தான் ஜேம்ஸ் ஜாய்ûஸயும், அவரது படைப்புகளையும் சிறப்பிக்கின்றன. ஹோமர், அரிஸ்டாட்டில், ஷேக்ஸ்பியர், ஜான் மில்டன், டால்ஸ்டாய், ஆன்டன் செகாவ் உள்ளிட்டோரின் தாக்கங்கள் இவருடைய படைப்புகளில் அதிகமாகக் காணப்படுகின்றன.  மொத்தத்தில், சிறந்த புத்தகம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காணாமல்போன கைப்பேசிகள் மீட்டு உரியவா்களிடம் ஒப்படைப்பு

காரைக்காலில் தீவிர வாகனச் சோதனை நடத்த அறிவுறுத்தல்

இரட்டை ரயில் பாதை பணி: நாகா்கோவில் செல்லும் ரயில்கள் ரத்து!

உஜ்ஜைனி காளியம்மன் கோயிலில் இன்று அக்னி கப்பரை வழிபாடு

நாலாட்டின்புதூரில் ரூ. 80 ஆயிரம் பறிமுதல்

SCROLL FOR NEXT