நூல் அரங்கம்

நனவோடைக் காலம் (1850-1950)

8th Aug 2022 01:01 PM

ADVERTISEMENT

நனவோடைக் காலம் (1850-1950) - ராமசாமி மாரப்பன்; பக். 512; ரூ.600;  இளங்கோவடிகள் இண்டெலக்சுவல்ஸ், நாமக்கல்- 637 001;  96007 97655.

ப்ராய்ட், ஹங், அட்லர் உள்ளிட்ட உளவியல் மேதைகளின் கருத்துகளில் தோய்ந்து, 1850-ஆம் ஆண்டு தொடங்கி 1950-ஆம் ஆண்டு வரை எழுதி வெளிவந்த ஆங்கில- ஐரோப்பிய நாவலாசிரியர்களின் படைப்புகளின் சுருக்கம் - இதன் சாராம்சம் - ஆசிரியர்களின் வாழ்க்கைச் சுருக்கத்துடன் கூடிய பதிவு இந்த நூல்.

ஹென்றி ஜேம்ஸ் நாவல்களில் நிஜம் ஒன்று - பிம்பம் ஒன்றான ரிஃப்ளக்ஸ் தன்மைகள் நிறைந்து இருக்கின்றன என்றும் ஒரு பாத்திரத்தின் வேறுபட்ட இன்னோர் அம்சம்தான் தாஸ்தாவெஸ்கியின் "குற்றமும் தண்டனையும்' உள்ளது  என்றும் நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நனவோடை (ஸ்ட்ரீம் ஆஃப் கான்சியஸ்னஸ்) உத்தி நாவல்களுக்கு கலை உருவம் கொடுத்த மூலவர்- முதல்வர் என்று இங்கிலாந்து எழுத்தாளர் டோரதி ரிச்சர்ட்சன் என்ற பெண்மணியை குறிப்பிடுகிறார். இவரின் படைப்பு உத்தி லாரல்ஸ் ஹாவ் பீன் கட்' என்ற குறுநாவலை எழுதிய எட்வர்ட் டுஜாரின் உத்தியை அடிப்படையாகக் கொண்டது என்றும் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அதேபோன்று நனவோடை உத்தியைப் பயன்படுத்தி மனித மனத்தின் உள்ளே இருண்டு கிடக்கும் சிக்கல், சிடுக்குகளை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தவர் விர்ஜினியா உல்ஃப்.  இதேபோன்றுதான் விர்ஜினியா உல்ஃப்புக்கும்,  ஜாய்ஸூக்கும் சற்றே கூடுதலான நனவோடை உத்தியில் எழுதி வெற்றி கண்டவர் வில்லியம் ஃபாக்னர் (தி சவுண்ட் அன்ட் ஃபியூரி) என்கிற அமெரிக்க நாவலாசிரியர் என க.நா.சு. பதிவை நாவலாசிரியர் குறிப்பிடுகிறார்.

இவ்வாறு ஆல்டஸ் ஹக்ஸ்லி, சாமுவேல் பெக்கட், கிரகாம் கிரீன், ஜோசப் கொன்ராட், லாரன்ஸ்  ஸ்டேர்ன் உள்ளிட்ட மேலும் 20 நாவலாசிரியர்களின் படைப்பு மற்றும் அவர்களது வாழ்க்கையையும் பதிவு செய்து - ஒரு சுவாரசியமான நூலாக்கியிருக்கிறார் ஆசிரியர். இலக்கிய விமர்சனம் செய்பவர்களுக்கு ஏற்ற நூல்.

ADVERTISEMENT
ADVERTISEMENT