நூல் அரங்கம்

பச்சைப் பாம்பும் அழகிய லில்லியும்

4th Apr 2022 09:54 AM

ADVERTISEMENT

பச்சைப் பாம்பும் அழகிய லில்லியும் - மூலம்: யொஹான் வோல்ப்கங்க் பான் கோதெ - தமிழில்: சுஜாதா ராஜகோபால்; பக். 48; ரூ.80; கார் முகில் எஜூகேஷனல் டிரஸ்ட், முகில் கார்டன்ஸ், டி.புதுப்பட்டி - 624704, திருமங்கலம் தாலுகா, மதுரை. 

ஜெர்மன் கவிஞர் ஷில்லெர் 'ஹோரன்' எனும் பத்திரிகைக்கு எழுதிய கடிதங்களில் தத்துவ ரீதியாக உள்ள கருத்துகளை மையப்படுத்தி உயிரோட்டமுள்ள கதையாக ஜெர்மானிய பன்முக ஆளுமை 'கோதெ'வால் எழுதப்பட்டதுதான் இந்நூல். 

ஓர் உன்னதமான இலட்சிய சமுதாயம் எப்படி இருக்க வேண்டும்? என்பதை பஞ்சதந்திர வகைமையிலான கதை சொல்லும் பாணியில் எழுதியிருப்பது இந்நூலின் சிறப்பு.
இந்தக் கதையில் வரும் பித்தளை, வெள்ளி, தங்கத்திலான மூன்று மன்னர்கள் ஆன்மாவின் மூன்று சக்திகளைக் குறிக்கின்றனர். பித்தளை மன்னர் உடல் - மன சக்தி; வெள்ளி மன்னர் தயாளம் - தெய்வ பக்தி; தங்க மன்னர் விவேகத்தையும் குறியீடாக வெளிப்படுத்துகின்றனர். சக்தி, காரியம் செய்யும் ஆற்றல், விவேகமுள்ள புத்தி இது மூன்றும் மனிதனை உன்னத 
நிலைக்கு எடுத்துச் செல்லும். இவற்றை இந்தக் கதையில் வரும் இளைஞன் அந்த மூன்று மன்னர்களிடம் இருந்து பெறுகிறான். 

இக்கதையில் வரும் முதியவர் கதாபாத்திரம் மிகச் சிறப்பாக படைக்கப்பட்டுள்ளது. 

ADVERTISEMENT

தனியொருவனால் உதவி செய்ய முடியாது. மாறாக, யாரால் சரியான நேரத்தில் பலரை ஒருங்கிணைத்து செயல்பட முடியுமோ, அவரால் உதவ முடியும் எனும் முதியவரின் கூற்று கதையின் ஓட்டத்திலும் சரி, தனி மனித வாழ்க்கையிலும் சரி எக்காலத்துக்கும் பொருந்துவதாக உள்ளன. 

ஒரு நாட்டில் வாழ்பவர்களும், அந்நாட்டுக்கு வருபவர்களும் அங்குள்ள சட்டதிட்டங்களின் படி நடக்க வேண்டும். தெரியாது என்று கூறி தப்பிக்க முடியாது என்பதை படகோட்டி மூலம் காட்சியாக விளக்கப்பட்டுள்ளது. 

இரு நூற்றாண்டுகளுக்குப் பிறகும் இக்கதையில் வரும் கருத்துகள் தற்காலத்துக்கும் பொருத்தமாக இருப்பது இந்நூலின் சிறப்பாகும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT