நூல் அரங்கம்

திருக்குறள் - சிறப்புரை

18th Oct 2021 11:48 AM

ADVERTISEMENT

திருக்குறள் - சிறப்புரை- இரெ.குமரன்; பக்.864; ரூ.800; மின் கவி,7/7,பிள்ளையார் கோயில் தெரு, கோபிசெட்டி பாளையம், ஈரோடு மாவட்டம் -638452.
 திருக்குறளுக்கு நிறைய உரைகள் வெளிவந்திருக்கின்றன. அவற்றில் இருந்து இந்நூல் வேறுபட்டுக் காட்சி அளிக்கிறது.
 எளிமையாகப் புரிந்து கொள்ளும்வகையில் ஒவ்வொரு குறளுக்கும்நூலாசிரியர் எழுதிய தெளிவான உரை இடம் பெற்றிருக்கிறது.அதுமட்டுமல்ல,அதோடு இரு வரிக் குறளின் பொருள் - அதன் சாராம்சம் - ஒரு வரியில் கூறப்பட்டிருக்கிறது.எடுத்துக்காட்டாக, "தீயினாற் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே நாவினாற் சுட்ட வடு' என்ற குறளுக்கு அதற்குரிய விரிவான உரையோடு, " நாவடக்கம் இல்லான் சொல்லால் கொல்வான்' என்று ஒரு வரியில் அக்குறளின் மையக் கருத்தை சொல்லிவிடுகிறார் நூலாசிரியர்.
 மேலும் குறளோடு தொடர்புடைய கருத்துகள் உள்ள வேறு இலக்கியங்களில் உள்ள பாடல்களும் மேற்கோளாக எடுத்துக்காட்டப்பட்டுள்ளன.
 சங்க இலக்கிய நூல்களான புறநானூறு, அகநானூறு, குறுந்தொகை, நற்றிணை முதற்கொண்டு சமகாலத்தில் புழங்கப்படுகின்ற பழமொழிகள் வரை மேற்கோள்களாக எடுத்துக்காட்டுப்படுவது நூலாசிரியரின் புலமையை எடுத்துக்காட்டுகிறது.
 திருக்குறளையும் அதற்கான உரையையும் படிப்பதற்காக இந்நூலின் பக்கங்களைத் திறக்கும் ஒரு வாசகர்,தனக்கு இதுவரை அறிமுகமில்லாத பல பழந்தமிழ் இலக்கிய நூல்களின் உலகுக்குள் நுழைந்து, அவற்றைத் தெரிந்து கொள்ளும் வாய்ப்பை இந்நூல் தருகிறது.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT