நூல் அரங்கம்

தமிழ்க்காற்றின் உயிரோசை

18th Oct 2021 11:43 AM

ADVERTISEMENT

தமிழ்க்காற்றின் உயிரோசை - வே.குமரவேல்; பக்.208; ரூ.160; முல்லை பதிப்பகம், 323/ 10, கதிரவன் காலனி, அண்ணாநகர் மேற்கு, சென்னை-40.
 மேடைப் பேச்சுக்கு, சொற்பொழிவுகளுக்குதமிழர் வாழ்வை மாற்றியமைத்ததில் மிகப் பெரிய பங்குண்டு.
 தமிழகத்தின் சிறந்த பேச்சாளர்களைப் பற்றிய அறிமுகமாகவும், அவர்களுடைய சொற்பொழிவுகளைப் பற்றிய மென்மையான விமர்சனமாகவும் இந்நூல் அமைந்துள்ளது.
 அதிலும் குறிப்பாக சிறந்த சொற்பொழிவாளரான ஸ்டாலின் குணசேகரனின் சொற்பொழிவுகள் குறித்த விரிவான தகவல்கள் இந்நூலில் இடம் பெற்றிருக்கின்றன.
 "ஸ்டாலின் பேச்சில் சொல் அலங்காரம் இருக்காதே தவிர, சொல்லாட்சி இருக்கும். வர்ணனைகளும் தனிமனிதத் துதியும் தனி மனிதத் தாக்குதலும் இல்லாமல், இலக்கணம் வகுப்பது போல கனகச்சி தமாக இருக்கும். எடிட் செய்யத் தேவையில்லை என்கிற அளவுக்கு எடுத்துக்காட்டாகத் திகழும்' என்கிறார் நூலாசிரியர்.
 எல்லாவற்றிலுமே நல்ல அம்சங்களும் கெட்ட அம்சங்களும் இருக்கின்றன என்றாலும், நல்ல அம்சங்கள் எங்கிருந்தாலும் பயன்படுத்திக் கொள்ளத்தான் வேண்டும். ஸ்டாலின் குணசேகரனும் இந்த அடிப்படையில்தான் வள்ளலார் விழா, விவேகானந்தர் விழா போன்றவற்றில் பல்லாண்டு காலமாக கலந்து கொள்வதைப் போலவே நபிகள் நாயகம் விழாவிலும்நெடுங்காலமாக கலந்து கொண்டு வருகிறார் என்பதை நூலாசிரியர் குறிப்பிடுகிறார்.
 பேச்சு என்கிற அளவில் மட்டும் நின்றுவிடாமல்பலதரப்பட்டவர்கள் பங்கேற்கும் வகையில் ஒவ்வோராண்டும் மக்கள் சிந்தனைப் பேரவை சார்பில் மிகச் சிறப்பாக ஈரோடு புத்தகத் திருவிழாவை நடத்தும் செயல்வீரராகவும் ஸ்டாலின் குணசேகரன் இருப்பதையும் நூலாசிரியர் சுட்டிக்காட்டுகிறார்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT