நூல் அரங்கம்

வல்லமை சேர்

11th Oct 2021 02:44 PM

ADVERTISEMENT

வல்லமை சேர் - ரவி கண்ணப்பன்; பக்.146; ரூ.140; தி ரைட் பப்ளிஷிங், 23 கண்ணதாசன் சாலை, தியாகராய நகர், சென்னை - 600 017.
 மனிதனின் எண்ணவோட்டங்களை ஊக்குவித்து, அதன் மூலம் குடும்பத்தில், சமுதாயத்தில் மாற்றங்களை, ஏற்றங்களை அடையச் செய்ய பல சான்றோர்கள் புத்தகங்கள் மூலம் வழி காட்டியிருக்கிறார்கள். அந்த வரிசையில் இந்த நூலின் ஆசிரியர் இந்நூல் மூலம் விவசாயம் சார்ந்த சிந்தனை விதையைத் தூவியிருக்கிறார்.
 ஒருவருடைய வலிமையான சிந்தனை சமூகத்தில் பெரிய தாக்கத்தை உண்டாக்கும் தன்மை படைத்தது. நமது நாட்டில் உள்ள பெரும்பான்மையான மக்கள் ஒரே மாதிரியான உயர்ந்த சிந்தனைகளைக் கொண்டிருந்தால், அது சமுதாயத்தில் பெரிய மாற்றங்களையும், வளர்ச்சியையும் உண்டாக்கும் என்பதில் ஐயமில்லை. அதுபோன்றதொரு விவசாயம் சார்ந்த சிந்தனையை இந்நூல் தட்டியெழுப்புகிறது.
 எண்ணற்ற மக்களின் எண்ணங்களில் விவசாயத்திற்கு உதவும் எண்ணத்தை ஆழ விதைப்பதால் மட்டுமே விவசாயத்திற்கு உதவுவதற்கான ஒரு மிகப் பெரிய மக்கள் சக்தியையும் வல்லமையையும் ஒன்றிணைக்க முடியும் என்ற நூலாசிரியரின் பதிவு மறுக்க முடியாது. உலகத்தவரின் பசி தீர்க்க தன்னால்தான் முடியும் என்கிற அன்பும், நேசிப்பும் விவசாயிகளிடத்தில் இருப்பதை நாம் உணர வேண்டியதன் அவசியத்தை நூலாசிரியர் கோடிட்டுக் காட்டியிருக்கிறார்.
 இந்த நூலைப் படிப்பதன் மூலம் விவசாயத்தின் மீது மக்களுக்கு ஆர்வம் பிறந்தால், அதுவே இந்நூலுக்குக் கிடைத்த வெற்றியாக அமையும்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT