நூல் அரங்கம்

ஆட்டிசம் ஒரு பார்வை

11th Oct 2021 02:43 PM

ADVERTISEMENT

ஆட்டிசம் ஒரு பார்வை - ராதா பாலசந்தர்; பக்.160; ரூ.150; சென்டர் ஃபார் டெவலப்மெண்ட் எஜுகேஷன் அண்ட் கம்யூனிகேஷன் & நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் எஜுகேஷன் அண்ட் கம்யூனிகேஷன், சென்னை-14; )044 - 2835 3136.
 மூளை வளர்ச்சியைப் பாதிக்கக் கூடிய நரம்பு சார்ந்த ஒருவகை வளர்ச்சிக் குறைபாடே ஆட்டிசம் என்று கூறும் நூலாசிரியர், ஆட்டிசம் என்பது பலர் நினைப்பது போல ஒரு வியாதி அல்ல. இது ஒரு குறைபாடு மட்டுமே என்கிறார்.
 ஆட்டிசப் பாதிப்புள்ள குழந்தைகளின் பெற்றோர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்வகையில் ஆட்டிசப் பாதிப்புள்ள குழந்தைகளின் உடல், மனநிலையைப் பற்றிய தெளிவான விளக்கங்கள் இந்நூலில் கூறப்பட்டுள்ளன.
 ஆட்டிசம் ஏன் ஏற்படுகிறது? அதன் அறிகுறிகள் எவை? ஆட்டிசத்தின் வகைகள் யாவை? ஆட்டிசம் பாதிப்புள்ள குழந்தைகள் இயல்பான உடல்நிலை உள்ள குழந்தைகளில் இருந்து எந்தவிதங்களில் எல்லாம் மாறுபடுகிறார்கள்? ஆட்டிசத்துக்கு என்ன சிகிச்சை? என்பன போன்ற பல கேள்விகளுக்கு இந்நூலில் விடைகள் உள்ளன.
 நூலாசிரியர் மருத்துவர் என்பதால், ஆட்டிசம் பாதிப்புள்ள குழந்தைகளுக்குச் சிகிச்சை அளித்த அனுபவங்களின் அடிப்படையில், இந்நூல் எழுதப்பட்டுள்ளது.
 ஆட்டிசம் பாதிப்புள்ள குழந்தைகளின் பெற்றோருக்கு வழிகாட்டும்விதமாக இந்நூலில் பல்வேறு யோசனைகள், வழிகாட்டுதல்கள் உள்ளன. ஆட்டிசத்துக்குத் தனியொரு நிபுணரின் வழிகாட்டல் மட்டும் போதாது. மனநல ஆலோசகர், நரம்பியல் நிபுணர், மன நல மருத்துவர், பேச்சுப் பயிற்சி சிகிச்சையாளர் உள்ளிட்ட நிபுணர்களைக் கொண்டு குழு மூலம், ஆட்டிசம் பாதித்த குழந்தைகளுக்குச் சிகிச்சை அளிக்க வேண்டும். இசை, நடனம், யோகா போன்றவை ஆட்டிசம் பாதித்த குழந்தைகளின் கவனக்குவிப்பை அதிகரிக்கும் என்பன போன்ற விளக்கங்கள் ஆட்டிசம் பாதிப்புள்ள குழந்தைகளின் பெற்றோர்களுக்குப் பயன்படும் வகையில் உள்ளன.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT