நூல் அரங்கம்

மூளைக்குள் வாருங்கள்

22nd Nov 2021 02:16 PM

ADVERTISEMENT

மூளைக்குள் வாருங்கள் - க.மணி; பக்.212; ரூ.220; அபயம் பப்ளிஷர்ஸ், 19, ஏ.கே.ஜி.நகர், முதல் தெரு, உப்பிலிபாளையம், கோவை-641015.
 புலன்களின் மூலமாக மூளைக்குள் செல்லும் தகவல்கள் எல்லாம் மூளையில் பதிய வைக்கப்படுவதில்லை. நிறைய தகவல்களை மூளை வீணடித்துவிடுகிறது. தகவல்களை சரி பார்க்காமலேயே சில குறுக்கு வழிகளைப் பயன்படுத்தி தகவல்களை எடிட் செய்து தனக்குள் பதிந்து வைத்துக் கொள்கிறது. அவகாசம் கொடுத்தால் மூளை சரியாக தர்க்கம் செய்யும். அவசரப்படுத்தினால் மூளை குறுக்கு வழியைக் கடைப்பிடிக்கும்.
 மூளையிலுள்ள ஹிப்போகேம்பஸ் - டெம்போரல் லோப் இரண்டும் சேர்ந்துதான் தற்காலிக நினைவுகளை வைத்திருக்கின்றன. இப்பகுதி சேதமடைந்தால் பார்த்தது, கேட்டது முதலியன உடனே மறந்துவிடும். ஹிப்போகேம்பஸ் அச்சத்திற்கேற்ப உடலில் மாற்றங்களை உண்டு பண்ணும். இதயம் படபடக்கும், உள்ளங்கைகள் ஈரமாகும்.
 எபிலெப்ஸி என்பது பொதுவாக காக்காய் வலிப்பு என்று அழைக்கப்படுகிறது. திடீர் திடீரென்று கட்டுக்கடங்காமல் மூளையில் தோன்றி பரவும் புயல்தான் காக்காய் வலிப்புக்குக் காரணம்.
 தொடு உணர்வுகளை அறியும் மூளையின் கார்ட்டெக்ஸ் பகுதிகள் மிக விஸ்தாரமாகவே மேப் செய்யப்பட்டுவிட்டன. உள்ளங்கால் முதல் உச்சி வரை உடலின் எல்லா தொடு உணர்வுகளும் மூளையில் உள்ளன. மூளையில் வலி நரம்புகள் இல்லாததால் வலி தெரியாது. மூளையில் அறுவைச் சிகிச்சை செய்வதற்கு முழு மயக்க மருந்து கொடுக்கத் தேவையில்லை.
 இவ்வாறு மூளை தொடர்பான பல வியப்பூட்டும் தகவல்கள் அடங்கியுள்ள சுவையான நூல்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT