நூல் அரங்கம்

படுகளம் (நாவல்)

DIN

படுகளம் (நாவல்)-ப.க பொன்னுசாமி; பக்.573;ரூ.650; நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., சென்னை-50; )044-2625 1968.
 திருமூர்த்திமலைக்கும் உடுமலைப்பேட்டைக்கும் இடையில் உள்ளது தான் பள்ளிபுரம் கிராமம். கரும்பையும், நெல்லையும் பிரதான விவசாயமாக கொண்ட இந்த கிராமத்தில் கவுண்டர் சமுதாயமே அதிகம்.
 பள்ளிபுரத்தில் 3 கவுண்டர் குடும்பங்களிடையே காலம் காலமாக தொடரும் விரோதத்தை மிக நேர்த்தியாக நூலாசிரியர் இந்த நாவலில் விவரித்துள்ளார்.
 கதைகளம் கொங்கு நாடு என்பதால் கொங்கு தமிழிலேயே நாவலை உருவாக்கியுள்ளார். சுமார் 500 பக்கங்களில் அந்த கொங்கு நடை கம்பீரமாக வீறு நடை போடுவது கூடுதல் சிறப்பு.
 கூத்தம்பூண்டி ஆத்தாளின் மகன்கள் நல்லசாமி, கண்ணுச்சாமி, செல்லச்சாமி-இவர்களின் உறவும் பகையும், உழைக்காமல் பூமிகளை விற்றுச் சீரும் செலவும் செய்யும் பன்னீர்க்கவுண்டர்; பூமிகளை வாங்கும் புதுப் பணக்காரர் பொங்கியண்ண கவுண்டர்; இவர்களின் முக்கோண பொறாமை, சந்தேகம், பகைமை - இதுவே படுகளம் நாவலின் கரு.
 படுகளம் உருவாவதற்கு எத்தனையோ காரணங்கள் இருக்கக்கூடும்.
 பள்ளிபுரம் கிராமம் படுகளமாவதற்கு இயற்கைதான் முக்கிய காரணம். விவசாயிக்குப் போதிய உதவி இல்லாமல் இருக்கும்போது நல்லவனும் வன்முறையை எதிர்ப்பதில்லை என்பதைக் கண்ணுச்சாமி கவுண்டர் கதாபாத்திரம் கண்முன் நிறுத்துகிறது.
 நூலாசிரியர் பேராசிரியராய், பல்கலைக்கழக துணைவேந்தராகப் பணியாற்றியவர். இருப்பினும் கொங்கு வட்டார மொழியில் இது போன்று ஒரு புதினத்தை தன்னால் படைக்க முடியும் என்பதை நிரூபித்திருக்கிறார்.
 இது கற்பனையான புதினம் என்றாலும் அவர் படைத்திருக்கிற கதாபாத்திரங்கள் இன்றும் நம் சமுதாயத்தில் உலா வருவதைப் பார்க்க முடிகிறது.
 9 பாகங்கள் 91 அத்தியாயத்தைக் கொண்டுள்ள இந்த புதினம், வாசகர்களுக்கு நல்ல விருந்து. கொங்கு இன மக்களின் பேச்சு வழக்கை அறிந்து கொள்ள வாய்ப்பாக இருக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாலூா் ஊராட்சியில் சீரான குடிநீா் வழங்கக் கோரிக்கை

அரசு பள்ளிகளில் உலக புத்தக தின விழா

விமானங்களில் 12 வயது வரையுள்ள சிறாா்களுக்கு பெற்றோருடன் இருக்கை: டிஜிசிஏ அறிவுறுத்தல்

குற்றாலம் செண்பகாதேவி அம்மன் கோயிலில் சித்திரைப் பௌா்ணமி திருவிழா

கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோயிலில் பொங்காலை விழா: நூற்றுக்கணக்கான பெண்கள் பங்கேற்பு

SCROLL FOR NEXT