நூல் அரங்கம்

ராமன் என்றொரு மானுடன் வாழ்ந்ததும்

10th May 2021 12:26 PM

ADVERTISEMENT

ராமன் என்றொரு மானுடன் வாழ்ந்ததும் - ராமாயணத்தின் முதல் பகுதி (பாலகாண்டம், அயோத்யா காண்டம்) - ஆர்.பி.வி.எஸ்.மணியன்; பக்.346; ரூ.200;எல்கேஎம் பப்ளிகேஷன், 10, ராமச்சந்திரா தெரு, தியாகராயநகர், சென்னை-600 017.
 வால்மீகி ராமாயணத்தையும் கம்பராமாயணத்தையும் ஒப்பிட்டு -இது உயர்வு, இது தாழ்வு என்ற பேதமின்றி, இரண்டிலும் உள்ள சிறப்புகளை மட்டுமே விவரித்துஎழுதப்பட்டுள்ள நூல் இது.
 நாரதரிடம் வால்மீகி மகரிஷி, "இப்போது இந்தப் பூவுலகில் உள்ளவர்களுள் ஸகல கல்யாண குணங்களும் கொண்ட ஒரு மனிதர் இருக்கிறாரா'' என்று கேட்க, அதற்கு நாரதர், "ஒருவர் இருக்கிறார். அவர்தான் சூர்யகுலத்தில் இக்ஷ்வாகு வம்சத்தில் பிறந்துள்ள ஸ்ரீராமன்'' என்று கூறுகிறார்.
 அப்படிக் கூறிவிட்டு நாரதர் ஸ்ரீராமனின் சிறப்புகளை நூறு சுலோகங்களாகப் பாடுகிறார்.அதுதான் முதலில் தோன்றிய "ஸம்úக்ஷப ராமாயணம்'.தொடர்ந்து பல மொழிகளில் பல்வேறு ராமாயணங்கள் வெளிவந்துள்ளன.
 இந்நூலில் பல்வேறு மொழி ராமாயணங்கள் குறித்தும் அவற்றின் ஆசிரியர்கள், உரையாசிரியர்கள் குறித்தும் விரிவாகக் கூறப்பட்டுள்ளது.
 கம்பருக்குஆதாரம் வால்மீகியே என்றாலும் சில இடங்களில் கம்பர் வால்மீகியிலிருந்து முரண்படுவதையும் இந்நூலாசிரியர் குறிப்பிட்டுள்ளார்.குறிப்பாக, "அகலிகை சாப விமோசனம்' பகுதியில் அகலிகை, தன் கணவன் இல்லாதபோது தன்னை நாடி வந்தவன் இந்திரனே என்பதை நன்கு அறிந்திருந்தாள்' என்று வால்மீகிகுறிப்பிட்டிருக்க, கம்பரோ "தன் கணவன் உருவில் இருந்தஇந்திரனை தன் கணவன் என்றே அகலிகை கருதினாள்' என்று குறிப்பிட்டுள்ளார்.
 இப்படி ஒற்றுமையையும் வேற்றுமையையும் சிறப்பாகப் பட்டியலிட்டுள்ளார் நூலாசிரியர்.ஆங்காங்கே வால்மீகியிலிருந்தும் கம்பரிலிருந்தும் பாடல்களை மேற்கோள்களாகத் தந்திருப்பது மிகவும் சிறப்பு.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT