நூல் அரங்கம்

மனுஷனுக்கு ஆயிரம் பிரச்சினை

10th May 2021 12:32 PM

ADVERTISEMENT

மனுஷனுக்கு ஆயிரம் பிரச்சினை - விநாயகமுருகன்; பக்.232; ரூ.270; உயிர்மை பதிப்பகம்,சென்னை-20; )044-4858 6727.
 "வேலைக்காகத்தான் படிப்பு' என்றாகிப் போன இக்காலத்தில், படித்து முடித்துவிட்டு, வேலைக்கான நேர்காணல்களில் பங்கேற்பவர்கள் எவ்வளவு சிறப்பாக நடந்து கொள்ள வேண்டும்?ஆனால் "பதினாறு ஆண்டுகள் கஷ்டப்பட்டுப் படித்துவிட்டு இறுதியில் எல்லைக்கோட்டைத் தொடும் நேரத்தில் ஏன் இப்படி அலட்சியம்? பொறுப்பற்ற தனம்?'
 "பழங்கால வரைபடங்கள் மீது எனக்கு ஆர்வம் அதிகம். வரைபடங்கள் மூலமாகவே நிலவமைப்பையும், வரலாற்றையும் மனிதர்களையும் நாம் தெரிந்து கொள்ள முடியும்'
 "இங்கு ஜாதிக்குஓர் உணவுப்பழக்கம், பிரத்யேகமான சமையல்முறை உண்டு. குறிப்பாக பிராமணர்கள், பிள்ளைமார்கள்,செட்டியார் நண்பர்களின் திருமணத்துக்கு நீங்கள் சென்றால், அவர்கள் ஜாதிக்கென்று உள்ள பிரத்யேக உணவை சுவை பார்க்கலாம்'
 "செர்னோபில் அணுஉலை விபத்தால் காற்றில் விஷம். நிலத்தில் விஷம். மரங்களில் விஷம்.செடிகொடிகளில் விஷம். இத்தனை வருடம் கழித்து இன்னமும்அந்தப் பகுதியில் கதிரியக்கம் இருக்கிறது. நூறு வருடங்களுக்கு மேல் ஆனாலும் இருக்குமென்று சொல்கிறார்கள்.'
 "இயக்குநர் ஷங்கர் எடுக்கும் திரைப்படங்களை எல்லாம் தொடர்ந்து கவனித்ததில் ஓர் ஒற்றுமையைக் கண்டுபிடித்தேன். ஷங்கர் திரைப்படங்களில் ஒரு ரேப் சீன் அல்லது ஒரு நிர்வாணக் காட்சி கண்டிப்பாக இருக்கும்'
 -இவ்வாறு ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத, ஆனால் சமகாலத்தின் பல நிகழ்வுகளைப் பற்றிய நூலாசிரியரின் பார்வையை வெளிப்படுத்தும்முகநூல் பதிவுகளின் தொகுப்பு இந்நூல். மிகவும் சுவையாக, கிண்டலாக,நகைச்சுவையாக பல பதிவுகள் எழுதப்பட்டு இருக்கின்றன. நமக்குத் தெரியாத பல விஷயங்களைத் தெரிந்து கொள்ள உதவும் நூல்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT