நூல் அரங்கம்

தமிழ் இலக்கியம்

10th May 2021 12:27 PM

ADVERTISEMENT

தமிழ் இலக்கியம் - ஒரு சோலைப் பார்வை - தி.வே.விஜயலட்சுமி; பக்.256; ரூ.200; மணிவாசகர் பதிப்பகம், சென்னை-104; )044- 2536 1039.
 தமிழ் மொழியின் சிறப்புடன் தொடங்கி, குழந்தை மேம்பாட்டில்நிறைவு பெறுகிறது இந்நூல். மொத்தம் 34 கட்டுரைகள். பாரதியார் பற்றியவை பல; தமிழ் பற்றியவை சில; கம்பர் பற்றியவை ஒன்றிரண்டு; இவைதவிர, சிலப்பதிகாரம், நாலடியார், மகளிர் மனமும் நிலையும், பெண்மை வாழ்க, ஜல்லிக்கட்டு, மு.வ.வின் புதினம், கண்ணதாசன் கருத்தோவியம், காவிரி நதியின் பெருமை என கதம்ப மாலையாகப் பல உள்ளன.
 வேதநாயகம் பிள்ளையின் தமிழ்த் தொண்டுடன், அவர் வாழ்வில் நிகழ்ந்த நகைச்சுவைச் சம்பவம் ஒன்றைக் காட்சிப்படுத்துகிறது ஒரு கட்டுரை. மகாகவி பாரதியார் படைத்த பாஞ்சாலி சபதத்தில் உள்ள சில சிறப்பம்சங்கள், அவரது கவிதையின் வேகம், சொல்லின்பம், நூறாண்டுவேண்டிய பாரதியின் ஆசை,புதிய ஆத்திசூடியில் உள்ள புதிய நெறிகள் என பாரதியார் குறித்த பல கட்டுரைகள் இதில் இடம்பெற்றுள்ளன.
 காலனுக்கு அஞ்சாத அருணகிரிநாதரின் முருக பக்தியும்; இறையனார், பரிமேலழகர், சேனாவரையர், இளம்பூரணர், அடியார்க்கு நல்லார், பரிதிமாற்கலைஞர், உ.வே.சா., திரு.வி.க., என அக்கால- இக்காலஉரையாசிரியர்களின் உரைவளமும் ஆராயப்பட்டுள்ளன.
 "சுந்தரமூர்த்தி நாயனாரால் பாராட்டப்பட்ட சிறப்பை உடையவன் வள்ளல் பாரி' என்று சொல்லப்பட்ட கட்டுரையில் சுந்தரரால் பாடப்பட்ட பாரி குறித்த பாடல் எதுவென்று எடுத்துக்காட்டியிருக்கலாம். இன்றைக்கு சமுதாயத்தில் மிகவும் கூர்ந்து கவனிக்கப்பட வேண்டியவர்கள் பெரியோர், மகளிர், இளைஞர்,குழந்தைகள்.இந்நால்வரின் மேம்பாடு குறித்த இறுதிக் கட்டுரைகள் நான்கும் முத்தாய்ப்பானவை.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT